25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
as 2
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

கார பூந்தி

தேவையான பொருள்கள்

  • கடலைப்பருப்பு – 200 கிராம்
  • இட்லி அரிசி – 50 கிராம்
  • நிலக்கடலை – 3 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – சிறிது
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

as 2

செய்முறை
*முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

*ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.

*நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை (ஓட்டை) வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.

*பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும். சூடாக இருக்கும் எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும்.

*எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி தயார்.

Related posts

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

ஈசி கொத்து  புரோட்டா

nathan

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

லசாக்னே

nathan

பனீர் பாஸ்தா

nathan

ரவா நிம்மபண்டு புளிஹோரா

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

மிளகு வடை

nathan