27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
vv
முகப் பராமரிப்பு

முகத்தை அழகாக்கும் தக்காளி! சூப்பர் டிப்ஸ்…..

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது.

பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.vv

Related posts

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சென்சிடிவ் சருமத்தினருக்கான சில ஃபேஸ் ஸ்கரப்கள்!!!

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!

nathan

கோடையில் முகம் பொலிவாக இருக்க என்ன மாதிரியான ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

ஏழே நாட்களில் முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாகப் போக்க வேண்டுமா?

nathan