39.1 C
Chennai
Friday, May 31, 2024
1 1530683552
மருத்துவ குறிப்பு

நீங்க லேட் நைட் தூங்கற ஆளா … அப்ப இத படிங்க!

ஆழ்ந்த தூக்கம் மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். உடல் இயக்கங்கள் சிறப்பாக அமைவதற்கு தூக்கம் உறுதுணையாக இருக்கிறது. தூக்கத்தில் குறைபாடு ஏற்பட்டால், அது நமது அந்த நாளின் வேலைகளில் ஒரு பின்னடைவைத் தருகிறது.

ஒரு இரவு முழுவதும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, அல்லது தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழிக்கும் தன்மை போன்றவற்றை தூக்கமின்மை கோளாறு அல்லது இன்சோம்னியா என்று கூறுவார்கள்.

தூக்கம்
ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இந்த குறிப்பிட்ட நேரத் தூக்கம் கிடைப்பதில்லை. படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதும், தூக்கத்தின் இடையில் விழிப்பதுமாக நேரம் கடந்து விடுகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யோகாசனம்
இரவு நேரத் தூக்கத்திற்காக உங்களைத் தயார் படுத்த யோகாசனம் அல்லது உடற்பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சிகளால் உடல் நெகிழ்ந்து ஆழ்ந்த தூக்கம் வர உதவுகிறது. நல்ல தூக்கம் வருவதற்கு உங்கள் உடலும் மனமும் திடமாக இருக்க வேண்டும். யோகாசனம், இன்சோம்னியா அல்லது தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான மற்ற கோளாறுகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளைக் கொடுக்க வல்லது. மேலும், உடல் அளவில் நீங்கள் தளர்ந்தாலும், தூக்கம் என்பது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும், இந்த பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

சிரசாசனா, சர்வாங்காசனா, பச்சிமொட்டாசனா, உத்தனாசனா, விபரீதகரணி, ஷவாசனா போன்ற ஆசனங்கள் நல்ல தீர்வைத் தருகின்றன. ஆனால் உங்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும் ஆசனம் பற்றி அறிந்து கொள்வதற்கு நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று அதனை பயிற்சி செய்வது நல்லது.

தொடர் பயிற்சி உடலின் எல்லா நிலைகளுக்கும் உடற்பயிற்சி நல்ல தீர்வைத் தருகிறது. குறிப்பாக இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு உடற்பயிற்சி தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடலின் லாக்டிக் அம்க்லம் சுரப்பது ஊக்குவிக்கப்படுகிறது . இதனால் உடலில் நெகிழ்வுதன்மை அதிகமாகிறது. இதன் காரணமாக தூக்கம் எளிதில் வரலாம். ஜாக்கிங், வேகமான நடைபயிற்சி, நீச்சல், ஸ்கிப்பிங், என்று இதய துடிப்பை அதிகரிக்கச் செய்யும் மூட்டுகளுக்கு அசைவைக் கொடுக்கும் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.இந்த பயிற்சிகளைத் தூங்கும் நேரத்திற்கு சற்று முன்னதாக திட்டமிடலாம். இதனால் உங்கள் தூக்கம் மேம்படும்.

தினசரி பயிற்சி உங்கள் உடலுக்கு அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டும். இதனால் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும். தினமும் நள்ளிரவு ஒரு மணிக்கு படுத்து அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு எழுந்தால் அடுத்த நாளும் உங்கள் உடல் அந்த நேரத்தில் அந்த செயலை எதிர்பார்க்கும். தூக்கமின்மையை போக்க, தினசரி ஒரே நேரத்தில் தூங்கி விழிக்கும் பழக்கத்தை நடைமுறையில் கொள்ளுதல் அவசியம் ஆகும். ஒன்று அல்லது இரண்டு நாள், தொடர்ந்து ஒரே முறையை முயற்சிக்கும்போது அதுவே தொடர்ந்து பழக்கமாக மாறலாம். இதனால் உங்கள் தூக்கத்தின் தன்மை மேம்படும்.

என்ன சாப்பிடலாம்?… சிலர் இரவில் சில வகை பானங்கள் அல்லது கலவைகளை இரவில் உறங்கச் செல்வதற்கு முன் எடுத்துக் கொள்வதால் ஆழ்ந்த தூக்கம் பெறுகிறார்கள். திப்பிலி செடியின் வேரை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் திப்பிலி தூளுடன், ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து, வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம். சீரகத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, இரவு உணவிற்கு பின் சாப்பிடலாம். வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.

மேலே கூறிய குறிப்புகளை பின்பற்றுவதால் தூக்கமின்மை குறைந்து ஆழ்ந்த தூக்கம் பெறலாம். தூக்கமின்மையைப் போக்கி வீட்டுத் தீர்வுகள் ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடியதாக இருக்கின்றன. ஆகவே அவற்றை ஒவ்வொன்றாக முயற்சிக்கலாம். எந்த முயற்சியும் உங்களுக்கு பலன் அளிக்கவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் குறித்த ஒரு ஆபத்தான கோளாறு இருப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

1 1530683552

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பை நீர்கட்டி வரக்காரணம் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா?

nathan

புற்று நோய் எதிர்ப்பு சக்தி – மங்குஸ்தான் பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா வாயுத்தொல்லையை குணமாக்க உதவும் அற்புத குறிப்புகள்..

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

வாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan