31.9 C
Chennai
Friday, May 31, 2024
5 1527758013
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தாய் காரம் அதிகமான உணவை சாப்பிட்டால் தாய்ப்பால் காரமாக இருக்குமா?

ஒவ்வொரு தாயுக்கும் குழந்தை பிறப்பு என்பது ஒரு இனம் புரியாத சந்தோஷத்தின் உச்சம் எனலாம். பிறந்த குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி போதுமான ஊட்டச்சத்துக்களை ஒவ்வொரு தாய்மார்களும் வழங்குவது அத்தியாவசியமானது ஆகும்.

தாய்ப்பால் ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி என்றால் போதுமான ஊட்டச்சத்துக்களை தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றால் அம்மாமார்களும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளே குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக நிற்கும். அதே சமயத்தில் தாய்ப்பாலூட்டும் போது சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த மாதிரியான உணவுகளால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக உங்களுக்கு காரசாரமான உணவுகள் பிடிக்கலாம். ஆனால் தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது தான் உங்கள் செல்லக் குழந்தைக்கு நல்லது. இதைப் பற்றி நாம் மேலும் விரிவாக கீழே காணலாம்.

உணவால் தாய்ப்பால் மாறுமா? கண்டிப்பாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவை பொருத்து உங்கள் தாய்ப்பாலின் சுவையும் மாறும். நீங்கள் தாய்ப்பால் சுரப்பிற்காக பூண்டை அதிகளவில் எடுத்து வந்தால் உங்கள் பூண்டின் சுவை தான் தாய்பாலிலும் நீடிக்கும். எனவே பாலின் சுவையை மாற்றும் போது அது உங்கள் குழந்தைக்கு பிடிக்காமல் கூட போகலாம். எனவே இயற்கையாகவே உணவின் சுவையை தாய்ப்பால் மூலம் குழந்தைகள் ருசிக்கலாம் என்று எக்ஸ்பட்ஸ் கூறுகின்றனர். மேலும் தாய்ப்பாலில் இயற்கையாகவே இனிப்பு சுவையும் சேர்ந்தே இருக்கும்.

விதவித சுவைகள் கருவில் இருக்கும் போதும் சரி தாய்ப்பால் குடிக்கும் காலங்களில் ஒரு தாய் எந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்கிறாரோ அது தான் குழந்தைகள் வளரும் போதும் அவர்களுக்கு பிடிக்கும் என்கின்றனர். எனவே தான் தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தைகள் தங்கள் சிறு வயதிலேயே விதவிதமான சுவைகளை சுவைக்கின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பார்முலா பீடிங் இதனால் தான் பார்முலா பீடிங் செய்கின்ற குழந்தைகள் ஒரே மாதிரியான சுவையை உணர்வதால் அவர்களுக்கு வளரும் பருவத்தில் வெவ்வேறு சுவைகள் பிடிக்காமல் போய் விடுகிறது. எனவே அவர்களுக்கு உணவை பிடிக்க வைப்பது என்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

காரசாரமான உணவுகள் நிறைய தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் காரசாரமான உணவுகளையே தொடருகின்றனர். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றே ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உங்கள் உணவு முறையை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

அறிகுறிகள் நீண்ட நேரம் குழந்தை விடாமல் அழுதால் அசெளகரியமான நிலையில் இருந்தால் தாய்ப்பால் குடித்த பிறகு கஷ்டப்பட்டால் சருமத்தில் ஏதாவது அழற்சி தென்பட்டால் திடீர் திடீரென எழுந்திருத்தால் சளி அல்லது பச்சை நிறத்தில் மலம் கழித்தல் வயிற்று போக்கு முச்சு விட சிரமம்

குறிப்பு : இந்த அறிகுறிகள் எப்போதும் காரசாரமான உணவால் மட்டுமே ஏற்படும் என்று சொல்ல முடியாது. சிட்ரஸ், பால் பொருட்கள் மற்றும் மக்காச்சோளம் போன்ற உணவுகளால் கூட அழற்சி ஏற்படலாம். மேலும் வேறு எதாவது உடல் உபாதைகள் கூட குழந்தைக்கு இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

என்ன செய்ய வேண்டும் நீங்கள் காரசாரமான உணவுகளை உட்கொள்ளும் போது குழந்தையிடம் மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனே கார உணவுகள் எடுப்பதை நிறுத்த வேண்டும். பிறகு ஒரு வாரம் கழித்து அந்த உணவை உட்கொண்டு தொடர்ந்து குழந்தையின் நடத்தையை கவனிக்க வேண்டும்.

பழக்கப்படுத்துங்கள் சில குழந்தைகள் இந்த மாதிரியான உணவுகளை சீக்கிரம் பிடித்து கொள்வார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு இது பிடிக்காமல் கூட போகலாம். எனவே சிறிது காலம் கழித்து மறுபடியும் பழக்கி பாருங்கள். அதிக காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதை விட ஆரோக்கியமான உணவுகளை எடுத்து வந்தால் உங்கள் குழந்தைகளும் நன்கு வளர்ச்சி அடைவார்கள். உங்கள் டயட் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. என்னங்க இனி உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான சுவையை கொடுக்கலாம் என்று யோசித்து விட்டீர்களா.

5 1527758013

Related posts

இதோ எளிய நிவாரணம்! குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

nathan

குடல்புண் ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!

nathan

தெரிஞ்சிக்கங்க… இந்த உணவுகள் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் எனத் தெரியுமா?

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

பெண்ணுறுப்பில் பயங்கர வலி, இந்த செயலை தவிர்க்க வேண்டும்: மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை!

nathan

வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும் வெண்டைக்காய்

nathan

தெரிஞ்சிக்கங்க…குடும்பப் பிரச்சினைகளை கையாள உதவும் சில வழிமுறைகள்

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan