24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
o
முகப் பராமரிப்பு

உங்க முகம் பத்தே நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை உடன காணலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் வீட்டில் இருந்தால், அதன் சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இல்லாவிட்டால், ஒரு வெள்ளரிக்காய் துண்டை எடுத்து, முகத்தை சிறிது நேரம் தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இதன் மூலமும் சோர்வுடன் காணப்படும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டலாம்.

உருளைக்கிழங்கு

கருவளையங்கள் உங்கள் முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? அப்படியென்றால் உருளைக்கிழங்கை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். இல்லையெனில் உருளைக்கிழங்கை வெட்டி அதனைக் கொண்டு கண்கள் மற்றும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவுங்கள்.

டூத் பேஸ்ட்

தூங்கி எழுந்து பார்க்கும் போது முகத்தில் பிம்பிள் உள்ளதா? அப்படியெனில் டூத் பேஸ்ட்டை பிம்பிள் மேல் வைத்து, 10 நிமிடம் கழித்து கழுவினால், பிம்பிள் அளவு குறையும்.

தக்காளி

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், முகத்தின் மென்மைத்தன்மை நீங்கும். ஆகவே முகச்சருமத்தை மென்மையாக்க தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகம் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்o

Related posts

முகத்தில் பருத்தொல்லையா? இதோ எளிய நிவாரணம்….

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

முயன்று பாருங்கள் முகத்திற்கு அற்புத பேஸ் பேக்குகள்!

nathan

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

மூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த ஒரு ஃபேஸ் பேக் ஒரே இரவில் முகத்தை வெள்ளையாக்கும் எனத் தெரியுமா?

nathan

நீங்கள் அழகான சருமத்தை பெற செர்ரி பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்! செய்முறை உள்ளே…

nathan

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்

nathan

முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan