உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க ‘ஃபேஸ் பேக்’ யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்.
* தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்… இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட பகுதி நிறம் மாறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள், உருளைக்கிழங்கை மையாக அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், பிரச்சனை மெள்ள நீங்கும்.
* வெயிலில் நீண்ட நேரம் அலைவது சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள், தினமும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும். இது அரிப்பு பிரச்சனையைச் சரிசெய்யும்; சருமப் பிரச்சனைகளையும் தீர்க்கும். சிந்தடிக் பவுடருக்குப் பதிலாக, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் குளியல் பவுடரை (Natural Bath Powder) பயன்படுத்தலாம். இவை அனைத்தும் செய்து பார்த்த பிறகும், பிரச்சனை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
* கோடையில் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும் என்பதால், ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும்போது, உள்ளுறுப்புகளில் நீர் வறட்சி ஏற்படும். குறிப்பாக, பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒருநாள் முழுக்க உணவுக்குப் பதில் ஜூஸ் மட்டுமே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வது, உடலிலுள்ள கழிவு வெளியேற உதவியாக இருக்கும். உடலில் கழிவுகள் வெளியேறிவிட்டாலே, சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.