05 1501914549 02 1378127550 6 sangupooo
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வேர் முதல் நுனி வரை ஆயிரம் மருத்துவ பலன்களை தரும் சங்குப்பூ!

சங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் உடையது. கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்து பூக்களுமே மருத்துவ குணம் உடையது தான். இதனால் தான் அவை இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.

வேர் சங்குப்பூ செடியின் வேர் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக விளங்குகிறது. இதன் வேரை தூளாக்கி, ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அத்தனையும் அழிந்து விடும்.

இலை சங்குப்பூ செடியின் இலையின் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதரணமாக ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் அளவுக்கு இந்த சாறை எடுத்துக்கொள்ளலாம். இதனை ஒரு வாரம் பருக வேண்டும். அதாவது இரண்டு ஸ்பூன் சங்குப்பூ சாற்றுடன், சம அளவு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகள் பருக வேண்டும்.

பயன்கள் இவ்வாறு இந்த சாற்றை பருகினால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கலாம். அதுமட்டுமின்றி, மூளைக்கு இது இதமளிக்க கூடியது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் கொடுக்கலாம்.

துளிர் முதல் வேர் வரை துளிர் முதல் வேர் வரை அந்த தாவரத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் சிறிதளவு எடுத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சமூலம் என்று சொல்வார்கள். இந்த பேஸ்ட் உடன் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

யானைக்கால் நோய் இந்த சமூலத்துடன் உப்பு சேர்த்து, நெறிக்கட்டியுள்ள இடங்களில் பத்து போட்டால், நெறிக்கட்டுக்கள் நீங்கிவிடும். யானைக்கால் வீக்கத்திற்கும் இதனை பத்து போடலாம்.

தேநீர் சங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்கள் இது உள்வீக்கங்களை போக்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் நெரிக்கட்டிக்கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது மருந்தாக இருக்கிறது.

05 1501914549 02 1378127550 6 sangupooo

Related posts

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை.

nathan

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் ஒரு தாயின் மார்பகம் என்ன ஆகிறது?

nathan

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்க எழுந்ததும் இதை செய்யுங்க

nathan

கவணம் உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அப்ப உடனே இத படிங்க…

nathan

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan

Appendix பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டுமா?

nathan

கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

nathan