27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
Moderate acne
அழகு குறிப்புகள்முகப்பரு

க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க

ஒருவருக்கு முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பொதுவான ஒன்று சருமத்துளைகளில் ஏற்பட்ட அடைப்புகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தான்.

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் சில நல்ல பலனை உடனடியாகவே கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால் அவற்றால் சில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Moderate acne

இதற்கு காரணம் அதில் உள்ள கெமிக்கல்கள் தான். இப்படி கெமிக்கல் நிறைந்த பொருளால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

அதனால் தான் எந்த ஒரு சரும பிரச்சனைக்கும் இயற்கை வழியில் தீர்வு காண வேண்டுமென பெரியவர்கள் கூறுகிறார்கள். இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

 

நாம் இதுவரை பருக்களைப் போக்கும் ஏராளமான பொருட்களைப் பார்த்திருப்போம். இதுவரை பார்க்காத ஓர் பொருள் தான் அரிசி கழுவிய நீர். ஆம், அரிசியை ஊற வைத்து கழுவிய நீரில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக பருக்களைப் போக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இக்கட்டுரையில் பருக்களைப் போக்க அரிசி கழுவிய நீரை பயன்படுத்தும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: எந்த ஒரு முறையை பயன்படுத்தும் முன்பும், அதனை கையின் ஒரு ஓரத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துப் பாருங்கள். ஒருவேளை அப்பகுதியில் அலர்ஜி எதுவும் ஏற்படாமல் இருந்தால், பிரச்சனையில்லை. அதைவிட்டு ஏதேனும் பிரச்சனை வந்தால், அதை பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

அரிசி நீர், டீ-ட்ரீ ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் அரிசி நீர், 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 4-5 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும்.

* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து லைட் ஸ்கின் டோனரைத் தடவ வேண்டும்.

அரிசி நீர் மற்றும் எலுமிச்சை சாறு

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி கழுவிய நீர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

 

* பின் முகத்தை தயாரித்து வைத்துள்ள கலவையால் கழுவுங்கள்.

* 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்

* இறுதியில் துணியால் முகத்தைத் துடைத்து, டோனர் கொண்டு முகத்தைத் துடையுங்கள்.

அரிசி நீர், பட்டை மற்றும் தேன்

* ஒரு பௌலில் 1 சிட்டிகை பட்டைத் தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் அரிசி நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை பருக்கள் நிறைந்த முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும்.

* பின்பு முகத்தை ஃபேஷியல் கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் நன்கு கழுவ வேண்டும்.

அரிசி நீர் மற்றும் க்ரீன் டீ

* ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் அரிசி நீர், 1/2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, கலவையில் நனைத்து முகம் முழுவதும் துடைக்க வேண்டும்.

* பின்பு 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் க்ரீன் டீயில் உள்ள பண்புகள் பருக்களைப் போக்குவதோடு, மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கும்.

 

அரிசி நீர் மற்றும் மஞ்சள் தூள்

* ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் அரிசி நீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை உண்டாக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு காணப்படும்.

அரிசி நீர் மற்றும் கற்றாழை ஜெல்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் அரிசி நீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களைப் போக்குவதோடு, அதனால் வந்த தழும்புகளையும் மறையச் செய்யும்.

அரிசி நீர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 4-5 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் முழுவதும் தடவ வேண்டும்.

* பின்பு 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

 

அரிசி நீர் மற்றும் ஆளி விதை

* இரவில் படுக்கும் முன் ஒரு பாத்திரத்தில் ஒரு கையளவு ஆளி விதையைப் போட்டு, நீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த ஆளி விதையை நன்கு அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முகத்தில் தயாரித்து வைத்துள்ள கலவையை தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். அதன் பின் முகத்தை துணியால் துடைத்துவிட்டு, லைட் ஸ்கின் டோனரைத் தடவுங்கள். இதனால் ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அரிசி நீருடன் சேர்ந்து பருக்களை மறையச் செய்யும்.

Related posts

புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!இனி இதுக்கெல்லாம் நோ…

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்!….

sangika

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு இதுதான் நடந்ததாம்? பயில்வான்..

nathan

சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

nathan

குவியும் வாழ்த்துக்கள்! மகனின் முதல் பிறந்த நாளில் புகைப்படத்தை பகிர்ந்த மேக்னா ராஜ்!

nathan

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan