கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள் அதிகம் உள்ளது. கற்றாழை சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, செரிமான பாதை சுத்தமாக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.
செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.நீரிழிவு நோயாளிகள் கற்றாழை சாறை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். மேலும் இது அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக் கசிவுகளை நிறுத்தும்.
தினமும் வெறும் வயிற்றில் ஒ கற்றாழை சாறு குடித்து வாருங்கள். இதனால் கற்றாழை சாறில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும். இதனால் உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.கற்றாழை சாறு தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை சாறு தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
கற்றாழையின் மடலில் உள்ள ஜெல்லை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாத காலம்வரை தலை முடியில் தேய்த்தால் நீளமான கூந்தலை பெறலாம். மேலும் காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டுகளாக கற்றாழை தினமும் சாப்பிட்டால் தேவையான சத்து கிடைக்கும். உடல் எடை கூடாமல் இருக்க உதவுகிறது.