25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
கூந்தல் பராமரிப்பு

தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

 

தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால்முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

• கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

• கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

• மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.

Related posts

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

nathan

கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…

sangika

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

தலை குளிர்மையாக இருப்பதற்கு

nathan

பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

sangika

முடி உதிர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்….

sangika

தலைமுடியை உலர வைக்க ஹேர் டிரையர் ( Hair Dryer) ஐ பயன்படுத்துகிறீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

வெள்ளை முடிகளை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி !…சூப்பர் டிப்ஸ்

nathan