33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
beauty tips for dark skin
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.beauty tips for dark skin

அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.

அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

கருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

Related posts

7 சரும பராமரிப்பு குறிப்புகள் சிறந்த பலனளிக்கும்

nathan

தமிழ் பெண் கண்ணம்மாவா இது?புடவையில் வைலரகும் புகைப்படம்

nathan

பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும்…..

sangika

அழகான கழுத்தை பெற…

nathan

tips அழகு குறிப்புகள்.. பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்….

nathan

சந்தனம் ஏன் இவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு!

nathan

ரசிகர்களின் சீண்டல் ! இளையராஜாவின் மகனை மதம் மாற்றிவிட்டீர்களே? யுவனின் மனைவி பதிலடி!

nathan

முதுகு அழகை பராமரிக்க ஸ்க்ரப் செய்யலாம்

nathan