நமது முன்னோர்கள் ஏழு, ஏழரை அடி இருந்தனர் என்று தான் அறிந்துள்ளோம். ஏன் நமது கொள்ளு தாத்தாக்களின் சராசரி உயரம் ஆறு அடிக்கு மேலாக தான் இருந்தது. ஆனால், இன்று அது ஆறடிக்கு குறைவாக மாறிவிட்டது. நாம் அடுத்த பரிணாம வளர்ச்சி கண்டு வருகிறோம் என்பதற்கான அறிகுறி தான் இது.
நமது உடலில் பயன்பாடில்லாமல், நாம் பயன்படுத்தாமல் இருக்கும் பல தசை, எலும்புகள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து போகலாம். அல்லது பயனற்று இருப்பதால் மறைந்தும் போகலாம். இதோ! அப்படி தான் இந்த பால்மாரிஸ் லோங்கஸை தசை 14% மக்களிடம் மறைந்து வருகிறது, இது ஒரு பரிணாம வளர்ச்சி என கூறுகின்றனர்….
ஐந்தில் ஒன்று!
மணிக்கட்டு இணைப்பில் பங்கெடுக்கும் ஐந்து தசைகளில் ஒன்று தான் இந்த பால்மாரிஸ் லோங்கஸை (Palmaris longus) எனும் தசை. இது சற்றே நீளமான தசையாகும். இது உள்ளங்கை வரையில் ஓடி, மணிக்கட்டின் நெகிழ்வுத்தன்மைக்கு ஆக்டிவேட் செய்கிறது.
பயன்கள்! தசை உடலின் அசைவு மற்றும் இயக்கம், சீரான இரத்த ஓட்டம், பேச்சு, உடலில் சூட்டை உண்டாக்க, உடல் வடிவம் மற்றும் உடலின் சில உட்பாகங்களை பாதுகாக்கவும் உதவி செய்கிறது.
இடத்திற்கு ஏற்ப… உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கு ஏற்ப தசையானது தோலிலும், எலும்பிலும் ஒட்டியிருக்கும். தசைநார்கள் எலும்புடன் எலும்பாக ஒட்டியே இருக்கும். தசைநார் பிணைப்பு மிகவும் வலிமையானதும் கூட.
திசுப்படலம்! திசுப்படலம் ஆனது தசையுடன், தசை ஒட்டி இருக்கும் வகை கொண்டது. பால்மாரிஸ் லோங்கஸை எனும் தசை முழங்கை அருகில் துவங்கி, ஃபோர்ஆர்ம் மத்திய பகுதியில் வரை ஓடக் கூடியதாகும். இது தசைநார் பிணைப்பு கொண்டதாகும்.
14% பேரிடம் காணவில்லை! இப்போதிருக்கும் மக்கள் தொகையில் 14% பேரிடம் இது காணாமல் இருக்கிறது என ஒரு ஆய்வில் அறியப்பட்டுள்ளது. இயக்கத்தில் தாக்கம் இல்லை எனிலும், பால்மாரிஸ் லோங்கஸை எனும் தசை வெளிப்படியாக காணப்படாமல் இருக்கிறது.
புலப்பட வேண்டும்! இது தனித்து இருக்கையில் உள்ளங்கை, மணிக்கட்டு பகுதியில் கைகளை முறுக்கும் போது கண்களுக்கு புலப்படும் வகையில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது
32 பற்களும் இல்லை! இந்த தலைமுறையினர் மத்தியில் பற்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என ஒரு ஆய்வில் முன்னரே கூறப்பட்டிருந்தது. 32 பற்களுக்கு பதிலாக 30 பற்கள் தான் காணப்படுகிறது என்றும், ஞான பல் எனப்படும் விஸ்டம் டூத் பலருக்கு முளைப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது.