36.1 C
Chennai
Wednesday, Jul 30, 2025
201803050826541739 sundakkai health benefits SECVPF
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா சுண்டைக்காயின் அற்புத மருத்துவக் குணங்கள்!

சுண்டைக்காயின் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன.

சுண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்
சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மையை சிறப்பாக்கும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் தயாரித்து அருந்தி வந்தால் ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.201803050826541739 sundakkai health benefits SECVPF

Related posts

சருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மீண்டும் பயன்படுத்த கூடிய துணி நாப்கின்களை பயன்படுத்துவது சரிதானா?

nathan

காலை உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

முரணான உறவு: பெண்கள் என்ன செய்யலாம்?

nathan

சிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..!!…

nathan

தினமும் 4 கப் காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு

nathan

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா.?

nathan