36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உடல் வலியை போக்கும் இந்த பூவை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அப்ப உடனே இத படிங்க…

முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.

அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது. தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது.

அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.

சீனா, நேபாளத்தில் வளரக்கூடிய சிறிய மரத்தில் இருந்து கிடைக்க கூடியது அன்னாசி பூ. இதை பயன்படுத்தி வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல், சளி, உடல் வலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, இஞ்சி, சீரகம், பனங்கற்கண்டு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். கால் ஸ்பூன் அன்னாசி பூ பொடி சேர்க்கவும். அரை ஸ்பூன் நசுக்கிய இஞ்சி, கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி வைரஸ் காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல், சளி, உடல் வலி குணமாகும். பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் தொற்றுக்களை நீக்கும். வயிற்று புண்களை ஆற்றும். தொற்றுநோய் வாராத வண்ணம் தடுக்கிறது.

காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்ட அன்னாசி பூ, நுண்கிருமிகளை நீக்கும் நல்மருந்தாகிறது. இதை பயன்படுத்தி வயிறு உப்புசம், மாந்தத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, சுக்குப்பொடி, சீரகம், பனைவெல்லம்.

செய்முறை: அன்னாசி பூ 2 சிட்டிகை, சுக்குப்பொடி 2 சிட்டிகை, கால் ஸ்பூன் சீகரம், கால் ஸ்பூன் பனைவெல்லம் சேர்த்து கலந்து உணவுக்கு பின் மதிய வேளையில் எடுத்துவர வயிறு உப்புசம், மாந்தம் சரியாகும். அன்னாசி பூவை பொடித்து, நெய் கலந்து இரவில் சாப்பிட ஆண்தன்மை குறைபாடு சரியாகிறது.உடல் சோர்வை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். 10 நெல்லி வற்றலை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அந்த நீரை காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

Related posts

நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள்…

nathan

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

nathan

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? முதல்ல இத படிங்க…

nathan

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

nathan

மாதுளையின் அரிய சக்தி

nathan

கொத்தமல்லியின் நற்பலன்கள்!

nathan

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு

nathan

தேனும் லவங்கப் பட்டையும் ……….!மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட…

nathan