36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா? அப்ப இத படிங்க!

கிராம்பு அதிக பட்சமாக பல்வலிக்குதான் பயன்படுத்துவோம். அதை தவிர்த்து பிரியாணி மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது என தெரியுமா? உடல் நலக் கோளாறுகளை போக்க, சரும நோய்கள் குணமாக என இன்னும் பலவித பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

நரம்புத் தளர்ச்சி : துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

சிறு நீரக பாதிப்பு : திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

மூட்டு வலி : சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

வயிற்றுக் கோளாறு : கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

தோல் நோய்கள் : வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்

வயிற்றுப் போக்கு : எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

Related posts

வாயு உபாதைகளுக்கு ஓமம்

nathan

இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்..

nathan

மனித மூளைக்குள் நிகழும் அதிசயம்

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan

வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்

nathan

முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்கள்!!!இந்த தினசரி பழக்கங்கள் தான்

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்! அதை தடுக்க இதை மட்டும் சாப்பிடுங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

nathan