31.2 C
Chennai
Saturday, Oct 19, 2024
06 1486378427 4 lipoma
மருத்துவ குறிப்பு

உங்க உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? கரைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிபோமா என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவதால் ஏற்படும் நிலை தான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்.

இப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.

கொழுப்புத் திசுக்கட்டிகளைப் போக்குவது எப்படி? இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு இயற்கை வழி ஒன்று உள்ளது. இப்போது அதுக் குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்: * மைதா * தேன்

செய்முறை: தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொண்டு, 36 மணிநேரம் கழித்து கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி 8 நாட்களுக்கு செய்து வந்தால், கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்திருப்பதைக் காணலாம்

எப்படி இது வேலை செய்கிறது? தேன் மற்றும் மாவுக் கலவை வெளிக் காயங்கள் மற்றும் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதிலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிகளைக் கரையச் செய்து, அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும்

குறிப்பு உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.06 1486378427 4 lipoma

Related posts

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்…!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! நாக்கில் வெள்ளைப்படிவது ஏன் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க சில மகத்தான வழிகள்!!!

nathan

கொழுப்பை கரைக்கும் – இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி

nathan

கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

nathan

அகத்திக்கீரை

nathan