பைல்ஸ் என்பது ஆசன வாயில் உள்ள நரம்புகளில் அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கொடுமையான பிரச்சனையாகும். ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால், ஆசன வாயில் இரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வலி, இரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாயில் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அதுவே கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும். இங்கு ஒருவருக்கு பைல்ஸ் எந்த காரணங்களுக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காரணம் #1
மிகவும் கனமான பொருட்களைத் தூக்கும் போது, உடலின் கீழ் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, ஆசன வாயில் உள்ள நரம்புகள் முறிய ஆரம்பித்து, பைல்ஸிற்கு வழிவகுக்கும்.
காரணம் #2
அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சியை செய்தால், அடிவயிற்றில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பைல்ஸ் பிரச்சனை ஆரம்பமாகும். குறிப்பாக கால்களுக்கு கடுமையான உடற்பயிற்சியை செய்தால், இந்நிலை ஏற்படும்.
காரணம் #3
மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சித்தால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடைந்து, பைல்ஸை உண்டாக்கும்.
காரணம் #4
எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், மலம் இறுக்கமடைந்து, பைல்ஸை உண்டாக்கிவிடும்.
காரணம் #5
மலச்சிக்கலால் குடலில் மலம் பல நாட்களாக தேங்கி, ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, அதனால் ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸை உண்டாக்கும்
காரணம் #6
கர்ப்ப காலத்திலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தை மலக்குடலில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறது.
காரணம் #7
அன்றாடம் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, அதனாலேயே சிலருக்கு பைல்ஸ் வரும்
காரணம் #8
வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் கழிக்கும் போது ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸ் வரும் வாய்ப்புள்ளது.