பெண்களை போலவே ஆண்களும் தங்களது சரும ஆரோக்கியத்திற்காக தினமும் சிறிதளவு நேரத்தை செலவிட வேண்டியது அவசியமாகும். ஆண்கள் மற்றும் பெண்களை தாக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான், மெலாஸ்மா (Melasma) எனப்படும் மங்கு ஆகும். இது ஒரு நோய் அல்ல. எனவே இதனை கண்டு அஞ்ச வேண்டாம். இது சருமத்தில் சிறிய மச்சம் போல ஆரம்பித்து வேகமாக முகத்தில் பாதி இடங்களுக்கு பரவி விடும். எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
இந்த மங்கு பிரச்சனையை சில நாட்டு மருத்துவ முறைகளை கையாழ்வதாலும், சில வகையான அழகு சிகிச்சைகளை மேற்க்கொள்வதாலும் சரி செய்து விடலாம். இந்த பகுதியில் இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி காணலாம்.
மங்கு என்றால் என்ன?
மெலாஸ்மா (Melasma) பிரச்னை, 80 சதவிகிதப் பெண்களுக்கு வரக்கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. சூப்பர்ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை மங்குகள் உள்ளன. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரலாம்.
யாருக்கு வரும்? 20-35 வயதுள்ளவர்களுக்கு வரலாம். பிறகு 45-50 வயதுள்ளவர்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. வேலூர், திருச்சி போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு, அதீத வெயில் காரணங்களாலும் மெலாஸ்மா வரலாம்.
சன் ஸ்கிரீன் இந்த மங்கு பிரச்சனையை அடியோடு அழித்திட, தினமும் மருத்துவர் பரிந்துரைப்படி சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
ஸ்கின் கேர் பீல்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று, ஸ்கின் கேர் பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனை செய்து கொள்வதன் மூலமாக நீங்கள் நல்ல பலனை பெற முடியும்.
ஆண்களுக்கு.. ஆண்களுக்கும் மங்கு வரும் என்பதால், அவர்களும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. வெயிலில் அதிக நேரம் அலைவதைத் தவிர்க்கலாம். முடிந்த அளவுக்கு சன் ஸ்கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மூடி பாதுகாக்கலாம்.
மெனோபாஸ் மெனோபாஸ் சமயத்தில் தோன்றும் மங்குப் பிரச்னைக்கு உடனே சரும மருத்துவரை அணுகி, பீல்ஸ் செய்துகொள்ளலாம்.
மாசுபடுதல் முதல் கட்டமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதுதான் சரி. சூரியக் கதிர்கள், அழுக்கு, மாசு, சுற்றுச்சூழலிருந்து காப்பாற்றுவது சன் ஸ்கிரீன்.
தவிர்க்கவும் ஹைட்ரொகுயினான் (Hydroquinone), ஸ்டீராய்டு (Steroid) க்ரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதனால், மங்கு போகலாம். ஆனால், மீண்டும் பல மடங்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். வேறு சில சருமத் தொல்லைகளும் வரலாம்.
சிகிச்சை டிசிஏ (TCA -Trichloroacetic acid) என்ற பீல்ஸ் இருக்கிறது. இந்த சிகிச்சையை எடுக்கும்போது, மங்கு தானாகப் போய்விடும். அதிகமாக, அதாவது ஆழமான மங்குவாக இருந்தால், 50 சதவிகிதம்தான் சரியாகும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேலோட்டமாக இருக்கும் மங்கு, பீல்ஸ் செய்யும்போது மூன்று மாதங்களிலேயே சரியாகிவிடும். மங்கு திரும்ப வர வாய்ப்பு உள்ளதால், யாருக்கு மங்கு திரும்ப வருமோ அவர்கள் மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சருமப் பராமரிப்புக்கான பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனுடன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதும் அவசியம். அடர் கறுப்பாக இருக்கும் இடத்தை வெண்மையாக்க, ஸ்கின் லைட்னிங் சிகிச்சையும் பயன் அளிக்கும்.
கோஷ்டம் கோஷ்டம் 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து உலந்து பின்னர் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். முகத்தில் இதனை தடவும் போது அதிகமாக அழுத்தம் கொடுத்து தடவ கூடாது.
பூவரசங்காய் முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.
தேங்காய் எண்ணெய் பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.
நாயுருவி நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
குமட்டிக்காய் குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
கற்றாழை கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.
தேமல் பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.
பசும் பால் சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.