28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
14 1507971122 3
தொப்பை குறைய

தொப்பையை 1 மாதத்திற்குள் குறைக்கனுமா இப்படி முயன்று பாருங்கள்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும் ஓர் விஷயம் தொப்பை. தொப்பை இருந்தால் அதனைச் சுற்றி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்ப்பட்டிடும்.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றுவது அதிக கொழுப்புள்ள உணவுகளை, ஜங்க் உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை தான் தொப்பை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

உடல் எடையை குறைக்க தொப்பையை குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகள் வந்தாலும் அவற்றால் பின்விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியமான முறையில் எந்த பின் விளைவுகளும் இல்லாமல் தொப்பையை குறைக்க முடியுமா? நிச்சயம் முடியும் நீங்கள் இந்த விதிகளை கடைபிடித்தால்

முடிவெடுங்கள் :
தொப்பையைக் குறைப்பதில் உடற்பயிற்சிக்கு 20 சதவிகிதம்தான் பங்கு இருக்கிறது. மீதி 80 சதவிகிதத்தைத் தீர்மானிப்பது உங்கள் உணவுப்பழக்கம்தான்.அதனால், தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் மட்டும் போதாது. முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் அதற்குப் பதிலாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்.

மேஜிக் ஹவர் : பல மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக் கொண்ட கருத்து இது மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை மேஜிக் ஹவர் என்கிறார்கள். இந்த நேரத்தில் தான் அதிகப்படியான ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு சிறிதளவு ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளும் நேரமிது. ஸ்நாக்ஸ் என்றவுடன் எண்ணெயில் பொறித்த உணவுகள்,குளிர்பானங்கள் எடுப்பதை தவிர்த்து.அதிக ப்ரோட்டீன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் சாப்பிடலாம். இப்படிச் செய்வதனால் நம் உடலில் மெட்டபாலிசம் கட்டுக்குள் கொண்டு வரப்படும். சர்க்கரையளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதோடு இது இன்ஸுலின் சுரப்பை கட்டுப்படுத்தும்.

பால் பயிற்சி : இது மிகவும் எளிமையான பயிற்சி இதனை தொடர்ந்து அல்லது வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை இந்த பயிற்சியினை மேற்கொண்டால் எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். ஜிம் பால் என்று சொல்லப்படுகிற பெரிய பாலைக் கொண்டு சின்ன சின்ன எக்சர்சைஸ் செய்ய வேண்டும், தினமும் காலையில் இதனை செய்தால் கூட போதுமானது.

உணவு வகைகள் : தொப்பையை குறைக்க மிகச்சிறந்த வழி சத்துமிக்க உணவுகளை சரியான முறையில் போதுமான அளவு எடுத்துக் கொள்வது. முழு தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். முழு தானியம் சாப்பிடுவதனால் வயிற்றில் சேர்ந்திடும் கொழுப்பு கரைக்கப்படும். பிரவுன் ரைஸ்,பார்லி,ஓட்ஸ்,கோதுமை ஆகியவற்றை உங்களின் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது.

சர்க்கரை : சர்க்கரையை முடிந்தளவு குறைத்திடுங்கள். தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்கிறவர்கள் ஸ்வீட் வகையறாக்களை அறவே தவிர்ப்பது நன்று. இன்ஸுலின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் குளுக்கான் அதிகரித்து தொப்பை வராது பாதுகாக்கும்.

மென்று சாப்பிடுதல் : இது விளையாட்டாய் தோன்றினாலும் நல்ல பலன் தரக்கூடியது. உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் உணவு நன்றாக செரிக்கும். செரிக்காத உணவுகளே பல நேரங்களில் கொழுப்பாக தேங்கி நிற்கிறது. உணவு சரியாக ஜீரணமாவதால் அடிக்கடி உணவு சாப்பிடுவதும் தவிர்க்கப்படும்.

உப்பு : உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்ன்றால் உப்பு அதிகம் சேர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடும். இதனால் ஊளைச்சதை அதிகமாகும். சுவையான உணவுகளை தேடித் தேடி உண்பதில் தான் தொப்பையின் ரகசியம் இருக்கிறது.

நட்ஸ் : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சொன்னாலே உடனேயே எல்லாரும் சொல்லும் ஒரு விஷயம் கொழுப்பு உணவுகளை நினைத்துப் பார்க்கவே கூடாது என்று தான். உண்மையில் இது தவறான போக்கு. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட கொழுப்புகள் நட்ஸ்கள் மூலமாக அதிகம் கிடைக்கின்றன. தினமும் நட்ஸ் சாப்பிடலாம்.

லெமன் ஜூஸ் : வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது எலுமிச்சை சாறு.தினமும் காலை எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம், அதிலும் கொஞ்சம் சூடான நீரில் கலந்து குடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு. இரண்டு நாட்கள் மட்டும் குடித்துவிட்டு பலனில்லை என்று விட்டுவிடக்கூடாது தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்தால் மட்டுமே ஒரளவு பலனை எதிர்ப்பார்க்க முடியும்.

கொழுப்பை சக்தியாக மாற்ற : உணவுகளில் உள்ள கொழுப்பினை சக்தியாக மாற்றிடும் கார்னிடைன் என்ற பொருள் சுரக்க விட்டமின் சி மிகவும் முக்கியம். அதோடு மன அழுத்தத்தல சுரக்கப்படும் கார்டிசால் தான் வயிற்றுக் கொழுப்பு அதாவது தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனை தவிர்க்க விட்டமின் சி அதிகமிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்ட்ரஸ் இல்லாத வாழ்க்கை முறை வாழ்வது மிகவும் அவசியமாகும். மன அழுத்தத்தை குறைக்க உங்கள் கவனத்தை திசை திருப்ப பல்வேறு பயிற்சிகளை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

சாப்பிடுவதற்கு முன்பு : ஒவ்வொரு முறை உணவு சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்திடுங்கள்.அது உங்க்கள் வயிற்றுக்குள் ஒரு பகுதியை நிரப்பிடும்.இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். சாப்பிடும் போது ஒரேயடியாக மொத்தமாக சாப்பிடாமல் உணவைப் பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடலாம். மூன்று வேளை உணவை ஐந்து வேளைகளாக சாப்பிடுங்கள்.

அவசியம் சாப்பிட வேண்டியவை : முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைகருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும். ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதே போல பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

மீன் : மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.14 1507971122 3

 

Related posts

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan

வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?

nathan

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

nathan

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க இவற்றை செய்யுங்கள்!…

sangika

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது

nathan

இதயத் துடிப்பை சீராக்கும் புஷ் அப் வித் ரொட்டேஷன் பயிற்சி

nathan

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

nathan

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க

nathan