36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

டீ, ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: அரை கப் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மென்மையாக தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

டீ, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை மாஸ்க்: இந்த மாஸ்க் ஒரு சிறந்த முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதனால் முகத்தில் பருக்கள் போவதோடு, கண்ணிற்கு அடியில் இருக்கும் கருவளையமும் போய்விடும். வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க்கில் எலுமிச்சையை சேர்ப்பது நல்லது.

டீ மற்றும் சாக்லேட் மாஸ்க்: இந்த மாஸ்க்கில் இருக்கும் டீ மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய 3-4 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் டீயை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

டீ மற்றும் கார்ன் ஃப்ளார் மாஸ்க்: 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார், 2 டேபிள் ஸ்பூன் டீ சேர்த்து கிளறி, முகத்திற்கு தடவி 10-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் சற்று பொலிவு பெற்றது போல் தெரிவதோடு, கரும்புள்ளிகளையும், இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கிவிடும். ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க் எல்லாம் வீட்டில் செய்து பார்த்து, அழகாக மாறுங்கள்.

 

Related posts

கரும்புள்ளிகளை நீக்கும் துளசி

nathan

நீங்க ஒரே ராத்திரியில இப்படி சிகப்பாக இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்…

nathan

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!

nathan

முகத்திற்கு பேஸ்பேக்

nathan

பெண்களே வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

முகத்தில் கருப்பு கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!

nathan

முகத்தை அழகாக்கும் தக்காளி! சூப்பர் டிப்ஸ்…..

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

மங்கு குணமாகுமா?

nathan