29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
அழகு குறிப்புகள்

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல் தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.

கசகசா – 2 டீஸ்பூனுடன்,
10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். மெல்லிய ஆர்கண்டி துணியை ஜில் தண்ணீரில் நனைத்து பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன் மேல் இந்த விழுதை பத்து போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்தச் சிகிச்கைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இந்த சிகிச்சையின் போது முகத்துக்கு க்ரீம் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதல் டிப்ஸ்: கூந்தலுக்கு இறுக்கமாக க்ளிப் போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக்கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.

Related posts

இவ்வளவு நன்மைகளா! சந்தனப் பேஸ் பெக் முகப்பொலிவை அதிகரிக்கும்

nathan

சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய இந்த எண்ணங்கள் பொய் எனத் தெரியுமா?

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

அழகு குறிப்புகள்:மென்மையான கைகளை பெறுவதற்கு.

nathan

கழுத்து பராமரிப்பு

nathan

அழகு சிகிச்சைகள் – முக அழகிற்கு குங்குமப்பூ

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்.?

nathan

பாத வெடிப்பு நீங்க

nathan