31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகு ஆலோசனை!

‘‘வெ யில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால், தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு, முடி வெடிப்பதுடன், செம்பட்டையாகவும் ஆகிவிடும். பஸ்ஸிலோ, டூ வீலரிலோ போகும்போது புழுதிபடுவதால், முடி வறண்டு கொட்டத் தொடங்கும். தலையை சுத்தமாக வைத்திருப்பதே இதற்கு நல்ல தீர்வு. வாரம் இருமுறையாவது நான் சொல்கிற முறையில் தலையை அலசி வந்தாலே, எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடும். 


 செம்பருத்தி இலை – 10, கொட்டை நீக்கிய புங்கந் தோல் – 3 எடுத்து, இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருநாள் இதைத் தலை முழுவதும் பூசி, நன்றாகத் தேய்த்து அலசுங்கள். புங்கந் தோல், தலையில் உள்ள அழுக்கை நீக்கும். செம்பருத்தி, கூந்தலை மிருதுவாக்கும்.

 சீயக்காய் – கால் கிலோ, பயத்தம் பருப்பு – 200 கிராம், பூலான்கிழங்கு – 100 கிராம், சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் – 10 கிராம்… இந்த நான்கையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு இந்தப் பவுடரை பயன்படுத்துங்கள். இதனால் முடி கொட்டாமல், செழிப்பாக வளரும். வாசனையுடனும் இருக்கும்.
பேன் தொல்லை இருந்தால் இந்த பவுடருடன், துளசி பவுடர், சுட்ட வசம்புத்தூள் – தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பேனோ, பொடுகோ கிட்டவே நெருங்காது.
தலைக்கான ஹென்னா கண்டிஷனர் தயாரிக்கும் முறையைச் சொல்கிறேன்…


மருதாணி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பவுடர், அரைத்த டீத்தூள், நெல்லிக்காய் தூள் தலா – 1 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன்… எல்லாவற்றை யும் கலந்து, இத்துடன் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, வெந்நீர் ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள்.
மருதாணி, தலையை குளிர்ச்சியாக்கும். வெந்தயம், முடி வெடிப்பையும் நுனி பிளவையும் போக்கும். நெல்லிக்காய், முடி கொட்டுவதை நிறுத்தும். நல்லெண்ணெய், செம்பட்டையான முடியை கறுமையாக்கும். தயிரும் டீத்தூளும் கூந்தலை மிருதுவாக்கும்.’’

Related posts

சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

மசாலா சப்பாத்தி

nathan

நடிகை கண்ணீர் – திருப்பதி கோவிலில் அவமானம் படுத்தப்பட்டேன்

nathan

குங்குமப்பூ தரும் அழகு

nathan

உங்களுக்கு சென்சிடிவ் சருமமா? அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்.. இதை ஒரு தடவை செய்தால் போதும் மருவை நிரந்தரமாக நீக்கும் வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

nathan

சருமத்தை பொலிவாக்கும் புளி

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ராக்கோலி தரும் 10 ஆரோக்கியமான நன்மைகள்!!

nathan

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika