31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – 2 கப்
3 நிற குடைமிளகாய் – தலா 1
உருளைக்கிழங்கு – 2
பொடியாக நறுக்கிய கேரட் – ஒன்று
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தாள் – 1 கட்டு
பூண்டு – 4 பல்,
இஞ்சி – சிறிது துண்டு,
பச்சைமிளகாய் – 2,
செஷ்வான் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.

கேரட், வெங்காயத்தாள், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.

கைப்பொறுக்கும் சூட்டில் கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு இருபுறமும் சுட்டெடுத்து சாஸோடு பரிமாறவும்.

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.

Related posts

மினி பொடி இட்லி செய்வது எப்படி

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

வாழைப்பூ வடை

nathan

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

nathan

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

சுவையான மினி இட்லி ஃப்ரை!…

sangika