1508152474 0132 1
சிற்றுண்டி வகைகள்

சுவையான அரிசி முறுக்கு செய்ய…!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 8 கப்
வறுத்த புழுங்கல் அரிசி – 1 கப்
வறுத்த உளுந்து – 11/2 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர்
பேங்கிங் பட்டர் – 100 கிராம்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு – 50 கிராம்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் புழுங்கல் அரிசியை பொரியரிசியாய் வறுத்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் உளுந்தையும் போட்டு வறுத்து தனியாக வைக்கவும். பச்சரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு வடித்து, நிழலில் காயவைத்து, வறுத்த புழுங்கலரிசி மற்றும் உளுந்துடன் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பட்டர், சூடு செய்த எண்ணெய் ஒரு குழிக்கரண்டி, உப்பு, பெருங்காயத்தூள், எள்ளு போட்டு தேவைக்கு தண்ணீர் ஊற்றி பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும். அதேநேரம் முறுக்கு மாவினை முறுக்கு குழாயில் போட்டு சின்ன தட்டில் பிழிந்து கொள்ளவும். பிழிந்து வைத்துள்ள மாவினை சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான அரிசி முறுக்கு தயார்.1508152474 0132

Related posts

அரிசி ரொட்டி

nathan

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா…..?

nathan

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை

nathan

சமோசா செய்வது எப்படி

nathan

ஜவ்வரிசி டிக்கியா

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

செட் தோசை

nathan