11 1507699689 6
சரும பராமரிப்பு

இந்த ஒரு பொருளை கொண்டு இழந்த அழகை இரவில் மீட்கலாம்! எப்படி தெரியுமா?

அழகான சருமத்தை இயற்கையின் மூலமாக பெறுவது தான் சிறப்பு. பார்லர்களுக்கு அடிக்கடி சென்று பல நூறுகளை நம்மால செலவு செய்ய முடியாது. நமது முன்னோர்கள் யாரும் பார்லர்களுக்கு செல்லவில்லை.. ஆனாலும் கூட அவர்கள் பல ஆண்டுகள் இளைமையுடன் இருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இயற்கை தான்.

நம்முன்னோர்கள் பயன்படுத்திய முக்கிய பொருள், மஞ்சள் தான். இந்த மஞ்சளை இரவு நேரத்தில் பயன்படுத்தி எப்படி அழகான, மாசு மருக்கள் இல்லாத முகத்தை பெறலாம் என்பது பற்றி காணலாம்.

 

மஞ்சள் மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாக்கள், தொற்றுக்கள், கேன்சர் செல்கள் போன்றவற்றை எதிர்க்கும் தன்மை கொண்டது. எனவே தான் மஞ்சள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக உள்ளது. இந்த மஞ்சளானது உடலுக்கு மட்டும் இல்லாமல் வெளி அழகையும் மேம்படுத்த உதவுகிறது.

அழகு நன்மைகள் மஞ்சளில் அதிக அளவு ஆன்டி- பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே இது சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது சரும துவாரங்களை போக்குகிறது.

சுருக்கங்கள் மஞ்சள் முகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கருமை, மங்கு போன்றவற்றை நீக்குகிறது. இது சுருக்கங்களை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கிறது.

தேவையான பொருட்கள் 1. கடலை மாவு – 2 டிஸ்பூன் 2. மஞ்சள் – 1 டிஸ்பூன் 3. பால் – 3 டேபிள் ஸ்பூன் 4. தேன் – சிறிதளவு

செய்முறை : மேலே கொடுக்கப்பட்டுள்ள, கடலை மாவு, தேன், பால், மஞ்சள் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தடிமனான அடுக்காக இதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனை அப்படியே 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் இதனை கழுவி விட்டு, உங்களது தினசரி மாய்சுரைசரை போட்டுக் கொள்ளுங்கள்.

இரவு நேரம் இந்த மாஸ்க்கை போட இரவு நேரம் மிகச்சிறந்ததாக இருக்கும். உங்களுக்கு இது பேசியல் செய்தது போன்ற உணர்வை கொடுக்கும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்து வந்தால் நீங்கள் நம்ப முடியாத சுத்தமான அழகான சருமத்தை பெறலாம்.

11 1507699689 6

Related posts

சரும பிரச்சனைகளை தீர்க்கும் கொத்தமல்லி

nathan

பெண்கள் ஏன் காலில் கருப்புக் கயிறு அணிகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

வேனிட்டி பாக்ஸ்: கன்சீலர்

nathan

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

nathan

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்

nathan

ஐஸ்வர்யா ராய் இவ்வளவு அழகாக தோன்ற காரணம் என்ன தெரியுமா?

nathan

உங்களை வயதானவர்கள் போல காட்டும் கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதில் மறைய செய்யலாம் தெரியுமா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 7 தவறுகள் உங்கள் சருமத்தில் செய்யவே கூடாது தெரியுமா?

nathan