மருத்துவ குறிப்பு

3 வயதில் குழந்தைகளுக்கான சத்தான டயட் டிப்ஸ்

3 வயதில் குழந்தைகளுக்கான சத்தான டயட் டிப்ஸ்

தற்போது 3 வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் அனுப்பிவிடுகின்றனர்இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தையும் வலிமையையும் அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை போதிய நேரத்தில் கொடுத்து வர வேண்டும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு வந்தால், அவர்களின் உடல் பருமன் அடைவதைத் தடுக்கலாம். 3 வயதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்..

குழந்தைகள் காலையில் எழுந்ததும், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலுடன், தோல் நீக்கிய 5 பாதாம்களை சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக பாதாமானது நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்ததாக இருக்க வேண்டும். காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு மிகமிக முக்கியமானது.

அவர்களுக்கு காலையில் கோதுமை பிரட்டில், வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து பின் அதில் தக்காளி வைத்து சாண்ட்விச் போல் செய்து கொடுப்பது மிகவும் சிறந்த உணவாக இருக்கும். காலையில் உணவிற்கு பின் ஒரு கப் தக்காளி சூப் கொடுப்பது மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி, ஒரு கப் பழங்களை கொடுக்கவும் வேண்டும்.

அல்லது ஒரு நாள் சூப் என்றால் மறுநாள் பழங்கள் என்று வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். மதிய வேளையில் குழந்தைகளுக்கு ஒரு கப் சாதம், 1 சப்பாத்தி, 1/2 கப் தால் மற்றும் 1/2 கப் பன்னீர் சப்ஜி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாலையில் அவர்களுக்கு சாக்லெட் மில்க் ஷேக் உடன், 2 பிஸ்கட் சாப்பிட கொடுக்க வேண்டும். பழங்களால் செய்த மில்க் ஷேக்கும் கொடுக்கலாம். மாலையில் 1 மணிநேரம் விளையாட விடுங்கள்.

அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது போன்ற ஏதாவது ஒன்றில் அவர்களை ஈடுபட செய்யுங்கள். இரவில் குழந்தைகளுக்கு எப்போதுமே லைட்டான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதிலும் 2 சப்பாத்தி, 1/2 கப் தால் மற்றும் 1/2 கப் தயிர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

Related posts

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய

nathan

மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு

nathan

முதலுதவி அளிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

முகத்தை வைத்தே உடலில் அதிக கொழுப்பு இருக்கிறதா-ன்னு தெரிஞ்சுக்கலாம்…

nathan

இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…சூரிய ஒளி உடலுக்கு ஆரோக்கியமானது என்பதற்கான 6 காரணங்கள்!!!

nathan

உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!

nathan

உங்களின் ‘ஈ.கியூ.’ எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan