How does it works
எடை குறைய

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்

ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள்.

மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு கோர்ஸை ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறைத்து, ஸ்லிம் ஆக முடியும். சருமம் பொலிவு பெறும். நச்சுக்கள் நீங்கும். இதோ. கன்சல்டன்ட் நியூட்ரிஷியனிஸ்ட் அனிதா பாலமுரளி அளிக்கும் ஜி.எம் டயட் சார்ட்!
How does it works
முதல் நாள்

p10a

பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது. தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்

p10b

முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். எனவே, போதிய எனர்ஜி கிடைப்பதற்காக வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். பின் காய்கறிகளைப் பச்சையாகவோ, எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து நிறையவே சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

p10c

வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிர்த்து மற்ற காய்கறி, பழங்கள், கீரைகளைச் சாப்பிடலாம். சாலட், சமைத்தது என எந்தவிதத்திலும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காம் நாள்

p10d

ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். பால் மற்றும் வாழைப்பழத்துடன் தக்காளி, வெங்காயம், குடமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்

p10e

முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். மேலும், வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆறாம் நாள்

p10f

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் சாப்பிடலாம். இதர காய்கறிகளும் சாப்பிடலாம். ஆனால், தக்காளி சேர்க்கக் கூடாது. சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்

p10g

பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது.

உங்கள் கவனத்துக்கு.

முதல் ஆறு நாட்களில் ஜூஸ், டீ, காபி குடிக்கக் கூடாது. பிளாக் டீ, பிளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம். எனவே, தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடி அல்லது 3 கி.மீ. தூரம் நடப்பது. அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

உங்களின் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். அளவுக்கு அதிக சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இதை ஒன்றை விழுங்கினால் 15 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்!

nathan

அடிவயிற்றுக் கொழுப்பை வேகமாக கரைக்கணுமா? அப்ப இந்த பச்சை நிற உணவுகளை சாப்பிடுங்க…

nathan

நீங்கள் எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா?… இதை முயன்று பாருங்கள்…

nathan

உடல் எடையால் கஷ்டப்படுகிறீர்களா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

nathan

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

nathan

நீங்கள் க்ரீன் டீ குடிச்சு உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா ? படிக்கத் தவறாதீர்கள்…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! 7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க இத செய்யுங்கள்!…

sangika

இந்த ஜூஸை தினமும் இரண்டு வேளை என ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்!

nathan