carambole
மருத்துவ குறிப்பு

மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம்!

நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது.
carambole
இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர்வழி பரவும் நோய்கள் குணமாகும். ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம். அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது.
20022
இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.
913639ac bcdb 4118 a178 72b1a2ffa6c1
இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.
10 கிராம்ஸ்டார் பழத்தில் :
கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்
சர்க்கரை – 3.98 கிராம்
கொழுப்பு – 0.33 கிராம்
புரோட்டீன் – 1.04 கிராம்
பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %
போலேட் – 12 கிராம்
வைட்டமின் சி – 34.4 கிராம்
பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்
பொட்டாசியம் – 133 மிலி கிராம்
துத்தநாகம் – 12 மிலிகிராம் உள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டிடுமாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாமதமாகும் மாதவிடாய்க்கு தீர்வு தரும் கைவைத்தியங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும் முசுமுசுக்கை கொடிகள்!! பார்த்தா யூஸ் பண்ணுங்க!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

nathan

இந்த இடங்களில் வலி ஏற்பட்டால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்…

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

உங்களுக்கு சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க

nathan

இந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan