31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

செட்டிநாடு காளான் மசாலா

எப்படிச் செய்வது?

காளான் – 1 பாக்கெட்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு

எப்படிச் செய்வது?

கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி கொண்டு மூடி 10 நிமிடங்கள் வேக விடவும். செட்டிநாடு காளான் மசாலா தயார்!!

Related posts

பேபி உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

nathan

பிர்னி

nathan

அப்பளக் கறி

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

தேங்காய் பால் பிரியாணி

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

nathan