10 1502349910 2
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் அடிக்கடி மலம் வெளியேறுவது சாதாரணமானதுதானா?

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சில வலிகளும், வேதனைகளும் உண்டாகும். ஆனால் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக தடவை மலம் கழிக்க நேரிடும். இது பொதுவானது தானா? இல்லை இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உங்களுக்கு மட்டும் இல்லை!
வழக்கமான நாட்களை விட மாதவிடாய் காலங்களில் அதிக தடவை மலம் கழிக்கும் பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை, அதிக பெண்களுக்கு உள்ளது. இந்த மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட செரிமான மண்டலம் மிக வேகமாக செயல்படுவது போன்று தோன்றும்.

ஹார்மோன் மாற்றம் மாதவிடாய் காலத்தில் உங்களது உடல் புரோஸ்ட்டக்ளாண்டின் என்ற ஒரு வகை ஹார்மோனை வெளிப்படுத்தும். இந்த ஹார்மோன் உங்களது கர்ப்பப்பை உடன் தொடர்புடையது. மேலும் இந்த புரோஸ்ட்டக்ளாண்டின் என்ற ஹார்மோன் செரிமான மண்டலத்தை வேகமாகவும் இயங்க வைக்கிறது. இதனால் தான் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

மன அழுத்தம் சில சமயங்களில் மன அழுத்தம் கூட இந்த அதிக வேக செரிமானத்திற்கு காரணமாக அமையலாம். எனவே மாதவிடாய் காலத்திலும் அதற்கு முன்னரும் கூட மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தடுக்க என்ன செய்யலாம்? மாதவிடாய் காலத்தில் உண்டாகும் இந்த வயிற்றுப்போக்கில் இருந்து தப்பிக்க, நீங்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பைபர் அதிகமாக உள்ள உணவுடன் சிறிது கார்போஹைட்ரைட் உணவுகளையும் சேர்த்து உண்ணும் போது இந்த வயிற்றுப்போக்கில் இருந்து விடுதலை பெறலாம்.

தவிர்க்க வேண்டியவை! மாதவிடாய் காலத்தில் சாக்லேட், பிரட், எண்ணெய் உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும். மேலும் வாயு உணவு பொருட்களையும் காபி குடிப்பதையும் மாதவிடாய் காலத்தில் தவிர்க்கவும்.

குறிப்பு : மாதவிடாய் காலத்தில் இல்லாமல், சாதாரண நாட்களில் உங்களது செரிமான மண்டலம் வேகமாக செயல்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானால் மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்..!

10 1502349910 2

Related posts

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

nathan

உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!!!

nathan

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

nathan

அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

nathan

உங்க சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கல்சியக் குளிசைகளும் மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா வகைகளும் : வைத்தியர்.சி.சிவன்சுதன்

nathan

உங்க பற்களில் இரத்த கசிவு மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம்-தெரிந்துகொள்வோமா?

nathan