29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
cover 29 1501320966
மருத்துவ குறிப்பு

நாள்பட்ட மூக்கடைப்பா? இதுவும் காரணமா இருக்கலாம்!

உடல் நலம் எல்லாம் சரியாத்தான் இருக்கு. அலர்ஜி எதுவும் இல்ல ஆனால் உடல் வலி, டயர்ட் குறிப்பாக மூக்கடைப்பு இருக்கிறதா?
cover 29 1501320966
நெடு நாட்கள் தொடரும் இந்தப் பிரச்சனைக்கான காரணம் தெரியாமல் அவதிப்படுகிறவர்கள் காரணத்தை கண்டறிய சில யோசனைகள்.
29 1501321108 1
கர்ப்பம் :
இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. கருத்தரிக்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அப்போது உடல் முழுவதும் ஏற்படும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் மூக்குகளில் அரிப்பு ஏற்படும். சில சமயங்கள் மூக்கின் உள்ளே வீக்கமும் ஏற்படும் இதனால் மூக்கடைப்பு ஏற்படும்.
29 1501321118 2
அடிமை :
மூக்கிற்கு தொடர்ந்து ஸ்ப்ரே பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு அடிமையாகி விடுவோம் திடீரென அதனை நிறுத்தும் போது இப்படியான சில பிரச்சனைகள் உண்டாகும்.
29 1501321133 3
தைராய்டு :
உடலுக்கு போதுமான அளவு தைராய்டு சுரப்பி சுரக்கவில்லை என்றாலும் மூக்கடைப்பு ஏற்படும். சிந்தட்டிக் தைராய்டு ஹார்மோன் அளவினை ரத்தப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். நீண்ட நாட்களாக தைராய்டுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நன்று.
29 1501321146 4
சைனஸ் :
பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் சளிப்பிடிப்பதாலேயே ஏற்படும். மூக்கடைப்பு, குளிர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சைனஸ் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.
29 1501321156 5
கட்டி :
மூக்கினுள்ளே கட்டி வளர்ந்திருந்தாலும் இப்படியான அறிகுறிகள் இருக்கும்.தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வாசம் அறியாது இருப்பது, போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனைபெறுங்கள். மூக்கின் வரும் கட்டியால் ஆபத்து ஏதும் ஏற்படாது என்றாலும் அது தொந்தரவாய் இருக்கும் என்பதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.
29 1501321167 6
தவிர்க்க :
மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு மூக்கில் அலர்ஜி ஏற்படுவது சகஜம். ஓரிரு நாட்கள் இவை சரியாகிடும். அதையும் தாண்டி தொடரும் பட்சத்தில் பயன்படுத்தும் சோப், துணிகளுக்கு பயன்படுத்தும் சோப், பெர்ஃப்யூம்,ஷாம்பு, தலைக்கு வைக்கும் எண்ணெய், என உங்கள் உடலில் பயன்படுத்தும் பொருட்களை ஒரு முறை சரி பாருங்கள். பின்னர் உங்களைச் சுற்றியிருக்கும் பொருட்கள் நீங்கள் இருக்கும் இடம், சென்று வரும் இடம் போன்றவற்றை கண்காணியுங்கள். இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே மாற்றவும்.

Related posts

மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்

nathan

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்கார செடிகள்

nathan

நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி

nathan

படுக்கும் முன் செய்யக்கூடாத விஷயங்கள்

nathan

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை நாட்டு மருந்துக் கடை!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பாலை நிறுத்த சில பாட்டி வைத்திய தீர்வுகள்!

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க

nathan

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan