27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
download 1 1
மருத்துவ குறிப்பு

நீரிழிவு நோயாளர்களுக்கு அருமருந்தாகும் கொவ்வைக்காய்!

கொவ்வைக்காய் மென்றாலே போதும் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.

கொவ்வைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கொவ்வைக்காய் நல்ல பலனை அளிக்கும். கொவ்வைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

download 1 1

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இரு ப்பவர்கள் கொவ்வைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

images 1 3

கொவ்வைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கொவ்வைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கொவ்வைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

download 4
பச்சையாகவே கொவ்வைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கொவ்வைக்காயை சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு கொவ்வைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

கொவ்வைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு இரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கொவ்வை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

download 2 1

கொவ்வைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கொவ்வை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.

கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கொவ்வைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.

Related posts

மூல நோயை சரியாக்கும் பசலைக் கீரை

nathan

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

தெரிந்துகொள்வோமா? டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

அதிகமாக நடக்கும் செல்போன் வன்முறை

nathan

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

nathan

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் இந்த ஆபத்தான பிரச்சனை வரலாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம் !

nathan