31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்!

தலையை சரியாக பராமரிக்கவில்லையென்றால் பல பிரச்சனைகள் வருவதுடன் இன்னொன்றும் சேர்ந்தே வரும். பேன். வேகமாக வளரக்கூடியது அத்துடன் ஒரே நேரத்தில் பல முட்டைகளையிட்டு பல்கி பெருகிடும். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லையென்றாலும் பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திடும். பேன் மற்றும் ஈறு என்று சொல்லப்படும் பேன் முட்டைகளை அழிக்க சில குறிப்புகள்.

பூண்டு :
பூண்டு வாசம் பேன்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அவை பேன்களை அழித்திடும். பத்து பூண்டுகளை எடுத்து தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தலைவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடலாம்.

பாதாம் :
பாதாம் பருப்பை ஊற வைத்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவிடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு :
பேனை ஒழிக்க சரியான தேர்வு இந்த உப்பு, உப்பு மற்றும் அத்துடன் வினிகர் கலந்து கொள்ளுங்கள். அதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஷவர் கேப் கொண்டு க்ளோஸ் செய்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்குளித்துவிடலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

வேப்பிலை :
வேப்பிலையின் கசப்பு பேனை ஒழித்திடும். வேப்பிலையை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் சமமாக கலந்து தலையில் தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

வெந்தயம் :
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் நான்கு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து தலைக்கு தடவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளித்திடலாம்.

Related posts

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை நீக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

ஸ்கூல் வேனை குழந்தைகள் சிரித்தபடி வரவேற்க இதெல்லாம் செய்யலாம்!

nathan

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

nathan

பாடாய்படுத்தும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண பாட்டி வைத்தியம்.

nathan

விஞ்ஞானிகள் தகவல்! புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு!

nathan

வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில கிராமத்து வைத்தியங்கள்!

nathan

பெண்களின் கருப்பையை பலமாக்கும் தண்ணீர் விட்டான்

nathan