25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
images 1
மருத்துவ குறிப்பு

நகம் கூட நம்மை பற்றிச் சொல்லுமாம்..தெரியுமா..??

ஒரு மனிதனின் விரல்களில் உள்ள நகங்களுக்கும் அவனுடைய குணத்திற்கும் ஒரு லிங்க் இருக்கிறதாம்!

நகத்தை வைத்தே உடல் நலக் குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை நகமே காட்டிக் கொடுத்து விடுமாம். சரி, நகத்தின் வடிவங்கள் எப்படி மனிதனின் குண நலன்களை நிர்ணயிக்கின்றன என்பது குறித்துப் பார்க்கலாம். ராசி பலன் போல இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.
images 1
நீளமான நகம்
உங்களுக்கு நீளமான நகங்கள் இருந்தால், உங்கள் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால், உங்களுக்கு அதிகமான கற்பனைத் திறனும் இருக்கும்.
நீங்கள் ஒரு பெரும் படைப்பாளியாகத்தான் இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவீர்கள். எப்போதுமே எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.
19 1405740815 3 nail shape
அகன்ற நகங்கள்
உங்க நகங்கள் அகலமாக இருந்தால், உங்கள் இடதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். இது உங்களுக்கு அதிக பேச்சாற்றலைக் கொடுக்க வல்லதாகும். நீங்கள் உங்கள் மனத்தில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதிலும் வல்லவர்கள். உங்கள் பேச்சில் மக்கள் நிச்சயம் மயங்குவார்கள்.
மறுபக்கத்தில், நீங்கள் மிகவும் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பீர்கள்.
images 1 1
முட்டை வடிவ நகங்கள்
நீங்கள் எதையுமே கூலாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகவும் அதிகம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், நீங்கள்தான் முன் நின்று அதைத் தீர்த்து வைப்பீர்கள். அனைவருக்கும் நீங்கள் “ச்சோ ஸ்வீட்”தான்!
P1630714 700x530
சதுர நகங்கள்
இவ்வுலகில் பெரும்பாலானோர் இவ்வகையினர்தான். உங்களுடைய தைரியமும் விடாமுயற்சியும் உங்கள் இரு கண்கள். நீங்கள் எப்போதும் சீரியஸாகவே இருப்பீர்கள். ஆனாலும் உங்களுடைய தலைக்கனம்தான் உங்கள் முதல் எதிரி. அனைவரிடமும் நீங்கள் கொஞ்சம் சமாதானமாகப் போவது உங்களுக்கு நல்லது.
19 1405740827 5 nail art2 1
முக்கோண நகங்கள்
உங்களிடம் நிறைய ஐடியாக்கள் பொங்கி வழியும். மற்றவர்கள் தவறவிடும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீங்கள் சரியாகப் பிடித்து விடுவீர்கள். தலைகீழ் முக்கோண வடிவில் உங்களுக்கு நகம் இருந்தால், நீங்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பீர்கள்.
மேற்கூம்பிய முக்கோண வடிவில் நகம் இருந்தால், உங்களைச் சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்.
19 1405740832 6 almond shape
பாதாம் நகங்கள்
உங்களுக்கு உயிர்ப்புள்ள கற்பனைத் திறன் மிகமிக அதிகம். நீங்கள் அன்பானவர், நேர்மையானவர், அமைதியானவர், சகிப்புத் தன்மை கொண்டவர். அடுத்தவர்களிடம் எப்போதுமே உண்மையாக இருப்பீர்கள். ஆனால் ஏதேனும் ஒன்று உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், உடனே சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனாலும் சிறிது நேரத்திலேயே உங்கள் கோபம் காற்றில் மறைந்து போய்விடும்.
images 1
கூர்மையான நகங்கள்
நீங்கள் கடும் உழைப்பாளி. வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயங்கவே மாட்டீர்கள். உங்களுக்கு சில விடயங்கள் பிடிக்காவிட்டாலும், அவை உங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்றால் அவற்றைக் கட்டாயம் செய்து முடிப்பீர்கள். ஆனாலும், உங்களுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் மிகவும் குறைவு.’

Related posts

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து மாதுளை !

nathan

உங்களுக்கு தெரியுமா நீண்ட ஆயுள் பெற உடற்பயிற்சியை விட மது குடிப்பதே சிறந்தது

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டுவலிக்கு சீனர்கள் நாடுவது எதைத் தெரியுமா? இதோ சில டிப்ஸ் !!

nathan

தொிந்துகொள்ளுங்கள்! மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

nathan

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

nathan

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

nathan

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

nathan