29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
201707201001318207 bed room bedroom relationship non veg avoid during pregnancy SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் நல்லதா?

பெண்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் மற்றும் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் நல்லதா?
“கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன.

காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்தில் மட்டும்தான் இருக்கின்றன. அதனால் கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடலாம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடும் போது எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்.

“கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாது என்று சொல்வது ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண மருத்துவர்கள் சொல்வார்கள். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடல் அளவில் பிரச்சனை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும்.

சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாமல், கணவன் – மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்.201707201001318207 bed room bedroom relationship non veg avoid during pregnancy SECVPF

Related posts

தாய்ப்பாலால் தாய்க்கு நன்மை

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில்…

sangika

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது

nathan

கர்ப்பமாக இருக்கும் போது பருக்கள் வந்தா எப்பிடி கையாளலாம் என தெரியுமா?

nathan

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவை பாதிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும வரட்சியும் தீர்வுகளும்

nathan

சிவப்பான குழந்தை பிறக்க கிராமத்து மருத்துவ வழிமுறைகள்!!!

nathan

தாய்மார்கள் குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

nathan

வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?

nathan