201707141525309298 aloo stuffed capsicum potato stuffed capsicum SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

குடைமிளகாயையும், உருளைக்கிழங்கையும் கொண்டு அற்புதமான ரெசிபி ஒன்றை செய்யலாம். அது தான் ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்
தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் – 4
உருளைக்கிழங்கு – 4
பச்சை பட்டாணி – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* குடை மிளகாயில் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கி விட்டு அதில் உள்ள விதையை எடுத்து விடவும்.

* உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

* கடைசியாக வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* குடை மிளகாயின் உள்ளே வதக்கிய உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களை அடுக்கி வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.

* குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி!!!201707141525309298 aloo stuffed capsicum potato stuffed capsicum SECVPF

Related posts

வெல்ல தேங்காய்ப்பால்

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்

nathan

கான்ட்வி

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

பீட்ரூட் ராகி தோசை

nathan

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவு கிடைக்கும். இன்று மாங்காய் வைத்து அனைவருக்கும் விருப்பமான சூப்பரான ப…

nathan

ஜவ்வரிசி பக்கோடா

nathan

ஸ்பிரிங் ரோல்ஸ் / Spring Rolls

nathan