அறுசுவை​பொதுவானவை

சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் :

Chilli Porotta
* மைதா – 1 கப் (200 கிராம்),
* பெரிய வெங்காயம் – 1,
* குட மிளகாய் – 1,
* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
* சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
* தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
* சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
* இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
* எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
* சர்க்கரை – 1 தேக்கரண்டி,
* உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
* வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.

Related posts

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி…

sangika

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்

nathan

பைனாப்பிள் கேசரி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்..!எளிதாக எப்படி செய்வது

nathan

சீஸ் பை

nathan

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

nathan