கனவுகள் எப்போதுமே விசித்திரமானவை தான். ஒரு கனவு ஏன் வருகிறது, எதனால் வருகிறது என நாம் சரியாக அறிய முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.
கனவுகளிலும் பல வகை இருக்கின்றன. அதில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நம் வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகள் கொண்டிருக்கும்.
அப்படி அவர்கள் பேசினாலும், கனவில் நாம் அவர்களுக்கு பதில் அளித்தது போன்ற கனவுகள் வருவது தீயதை சுட்டிக்காட்டும் என கூறுவர்.
கனவில் இறந்தவர்கள் வருவது ஏன்? அவர்கள் பேசுவது போன்ற கனவுகள் கூறும் செய்தி என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.
வெற்றுக் கனவு!
இறந்தவர்கள் நம் பெயர் சொல்லி அழைக்கும் படியான கனவினை வெற்றுக் கனவு என்கிறார்கள். இந்த கனவு வரும் போது உங்களுக்கு வண்ணம் ஏதும் தெரியாது.
உங்கள் அருகே அல்லது சுற்றி ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உங்கள் பெயர் சொல்லி அழைக்கும் ஒலி மட்டுமே கேட்கும்.
#1
கனவில் உயிருடன் இல்லாதவர்கள் வந்து உங்கள் பெயர் சொல்லி அழைப்பது, அவர்கள் நீங்கள் கடின நேரத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தியாக கூறப்படுகிறது.
#2
நீங்கள் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும் குறி.
#3
உங்கள் குரலை மிக அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துவது.
#4
மிக உயர்ந்த, ஆழமான குரலில் உங்கள் பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்துவதாம்.
#5
யாரும் இறக்காத / இல்லாத கல்லறை, யாரும் இல்லாத இறுதி சடங்கு போன்றவை கனவில் வந்தால், உங்கள் இல்லற வாழ்க்கை அபாயமாக மாற போவதை குறிப்பதாம்.
#6
கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்கள் தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறி.
#7
கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.
Related posts
Click to comment