23 1448270374 nivembukashayamisthebestnaturalmedfordenguefever1 1
மருத்துவ குறிப்பு

டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் – செய்முறை மற்றும் பயன்கள்!!

நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே பல இடங்களில் இந்த கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது.

டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, தலைவலி, செரிமானம், மூட்டு வலி, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல பிரச்சனைகளுக்கு இந்த நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வளிக்க கூடியது. எடுத்ததும் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடாமல், சிறந்த இயற்கை மருந்தாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தை குடித்து பயனடையுங்கள்….

தேவையான மூலிகைகள் நிலவேம்பு கஷாயம் தயாரிக்க தேவையான ஒன்பது மூலிகைகள்: சிறியாநங்கை (நிலவேம்பு), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு

செய்முறை நாம் மேலே கூறியுள்ள ஒன்பது மூலிகைகளை நன்கு உலர (காய) வைத்து, அனைத்து மூலிகைகளையும் சம பங்கு அளவில் எடுத்து கலந்து, அரைத்துப் பொடியாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அந்த நீரை இதமான சூட்டுக்கு ஆற வைத்து பருக வேண்டும்.
மூட்டு வலி

நிலவேம்பு கஷாயம் பருகி வந்தால் மூட்டு வலி மற்றும் உடல் வலி குறையும். மேலும் பின்னாட்களில் இதுப் போன்ற வலிகள் ஏற்படாமல் இருக்க வலு சேர்க்கும். டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது மூட்டு வலியும், தசை வலியும் ஏற்படும் அவற்றை இது சரி செய்கிறது.
நீரிழிவு நோய்

டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோய்க்கும் நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக விளங்குகிறது. இது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு

மேலும் நிலவேம்பு கஷாயம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் நச்சுக்களை விரைவாக அழிக்க முடியும்.
தலைவலி

அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரண்டு வேளை இந்த கஷாயத்தை குடித்து வந்தால். தலையில் நீர்க்கட்டு குறைந்து, தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளும் கூட சரியாகும்.
முக்கிய குறிப்புகள்

நிலவேம்பு கஷாயத்தை தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இல்லையேல் அதன் பயன் இருக்காது. மேலும் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தர வேண்டும் எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு கொடுங்கள்.
தினமும் கூட குடிக்கலாம்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காலை, மாலை என இரு வேளைகள் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குடித்து வந்தால் விரைவாக குணமடையலாம்.

23 1448270374 nivembukashayamisthebestnaturalmedfordenguefever1

Related posts

உங்களுக்கு தெரியுமா உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்!!!

nathan

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

உங்கள் கவனத்துக்கு பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்?

nathan

பெண்ணாக இருப்பதன் ஆனந்தங்களும் அவஸ்தைகளும்

nathan

அந்தத் திருப்தி மிக அருமையான ஸ்ட்ரெஸ் ரிலீவர்!

nathan

விவாகரத்தை தடுக்க முடியுமா?

nathan

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

பாட்டி வைத்தியத்துல வாய்ப்புண்ணுக்கு இவ்ளோ மருநு்து இருக்கா?அப்ப இத படிங்க!

nathan