35.8 C
Chennai
Wednesday, Jul 30, 2025
shutterstock 181003538 15170 17588 17036
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்?

சிறுநீரகத் தொற்று, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதனால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்கள் மற்றும் அதை சரிசெய்வதற்கான டிப்ஸ்கள்

* சுகாதாரமில்லாத டாய்லெட்டை பயன்படுத்துதல், சிறுநீரை அடக்குதல், தண்ணீர் குறைவாக குடித்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது, உடல் சூடு, உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு, சர்க்கரை வியாதி, ஸ்டீராய்டு எடுத்துக் கொள்ளுதல், சுகாதாரமில்லாத குடிநீர், தோல் வியாதிகள், ஆல்கஹால் பயன்பாடு, மரபணுக் கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது.

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரில் வெட்டி வேர் போட்டு குடிக்கலாம். .

* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பழங்களில் தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை பச்சடி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

* கால் கட்டை விரலில் வெள்ளை சுண்ணாம்பு வைத்தால் சிறுநீரால் ஏற்படுகிற கடுப்பு குறையும்.

* தொப்புள்ளைச் சுற்றி விளக்ககெண்ணெய் தடவினால் உடல் சூடு குறையும்.

* நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி பவுடர் வாங்கி கசாயம் செய்து குடிக்கலாம்.

* சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிடலாம்.

* ஃ ப்ரஷ் காய்கறிகள் விற்கும் கடைகளில் கிட்னி பீன்ஸ் கிடைக்கும். அதனை கூட்டு வைத்து சாப்பிடலாம்.

* முருங்கை பீன்ஸ் சூப் சாப்பிடலாம்.

* வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.

* வெள்ளரி விதையை அரைத்து தொப்புள்ளைச் சுற்றி பற்று போல் போட்டால் சரியாகும்.

* நெல்லை பொடியாக்கி கசாயம் வைத்து சாப்பிடலாம்.

* சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பச்சையாக சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து சிறுநீரகத் தொற்று சரியாகும்.shutterstock 181003538 15170 17588 17036

Related posts

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

nathan

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்

nathan

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்!

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

கருச்சிதைவிற்கு பின் மீண்டும் கருத்தரித்து உள்ளீர்களா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளை படுதல் பிரச்னைக்கு வீட்டி வைத்தியம்

nathan

பூவரசு இயற்கை மருத்துவமும், கருப்பையைக் காக்கும்

nathan

42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

nathan