31.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
201706271130267104 12hair pack. L styvpf
தலைமுடி சிகிச்சை

தலைமுடியை வலிமையாக்கும் வீட்டு வைத்தியம்

மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை வலிமையாக்கலாம்.

பலவீனமான தலைமுடியை வலிமையாக்கும் வீட்டு வைத்தியம்
பெண்கள் முடி உதிர்வதால் கவலையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை வலிமையாக்கலாம்.

அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு, குறிப்பாக புரோட்டீன் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட்டு வந்தால், நிச்சயம் தலைமுடியின் வலிமையை அதிகரிக்க முடியும். இங்கு தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் படித்து, அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறை தலைக்கு ஹேர் மாஸ்க் போட்டு வருவதன் மூலம், முடியின் வலிமையுடன், வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

201706271130267104 12hair pack. L styvpf

* முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவில் தான் அதிகம் உள்ளது. ஆகவே முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதில் உள்ள புரோட்டீன், மயிர்கால்களை வலிமையாக்கும்.

* தலைமுடியை நீரில் அலசிய பின், முடியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து, பின் பால் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்களின் வலிமைக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடி வலிமையடையும்.

* ஹென்னா தலையில் உள்ள நரைமுடியை கருமையாக்க உதவுவதோடு, அது முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கும். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை இரவில் படுக்கும் முன் ஹென்னா பொடியை நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

* வாழைப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி, முடியின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் நன்கு அலச, முடியின் வலிமை அதிகரித்து, உதிர்வது குறையும்.

* நெல்லிக்காயின் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவியோ அல்லது தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொண்டு வந்தாலோ, தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் குறையும்.

* 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனையை முற்றிலும் தடுக்கலாம்.

Related posts

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

ஏன் வெயிட் பண்றீங்க… கேரட் எண்ணெய் தயாரித்து தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

முடி பராமரிப்பு குறிப்புகள் (Hair Care Tips in Tamil)

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கூந்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

nathan

திடீர் கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan