27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1497852060 9476
எடை குறைய

உடல் எடை குறைக்க உதவும் மருத்துவ குறிப்புகள் ருத்துவ குறிப்புகள்

சீரகம் சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.

* வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

* சீரகம் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை – 1/2, தண்ணீர் – 1 1/2 டம்ளர், செய்முறை: இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.

* கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

* சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

* ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

* பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.1497852060 9476

Related posts

ஆய்வில் வெளியாகிய தகவல்! திகில் படம் பார்த்தால் உடல் எடை குறையுமா?

nathan

உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்

nathan

தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க எளிய வழி

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!

nathan

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி

nathan

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

nathan

வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்

nathan

எடையை குறைக்க எட்டே வழிகள்,

nathan