thyroid 22 1495448979
மருத்துவ குறிப்பு

தைராய்டு பாதிப்பை அஜாக்கிரதையாய் எடுத்துக்காதீங்க! அதன் அறிகுறிகளும் , தீர்வும் !!

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி மறந்து போறேன்,கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல. இப்படி யெல்லாம் உங்களுக்கு தோணுதா??

இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் . தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

தைராய்டு சுரப்பி : தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தைராய்டு குறைவாக இருந்தால் : தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

தைராய்டு அதிகரிக்கும்போது : தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உடல் எடை குறையும், சோர்வு உண்டாகும், பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு குறைவதை தடுக்கலாம்.

மன நோய்: தைராய்டு பாதிப்பு இருந்தால் மனப்பிறழ்வு, மன அழுத்தம், மற்றும் பல்வித மன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இது தைராய்டு ஹார்மோன் சம நிலையற்று இருப்பதாம் உண்டாகும் பக்கவிளைவுகளாகும்.

ஹைபோ தைராய்டிற்கான டயட் : தைராய்ட் இருப்பவர்கள் டயட் மிக முக்கியமாக பின்பற்ற வேண்டும். தைராய்டு குறைவாக இருப்பவர்கள் அயோடின்,. கடல் உப்பு போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் அயோடின் இழப்பை சரி செய்யலாம்.

ஹைபர் தைராடிற்கான டயட் : தைராய்டு அதிகம் இருப்பவர்கள் பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பாட்டி வைத்தியம் ஹைபோ தைராய்டு இருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். அவர்களுக்கான ஒரு பாட்டி வைத்தியம்தான் இது. தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

thyroid 22 1495448979

Related posts

மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கும் கட்டுக்கொடி

nathan

வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவதனால் உடம்பிலுள்ள கெட்ட சளியை வெளியேற்ற முடியும்!

nathan

இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

உங்க கருவுறாமை பிரச்சனை பற்றிய கட்டுக்கதை என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்

nathan

ஆண்மை குறைபாட்டை போக்கும் எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

nathan

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

nathan

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

nathan