27.7 C
Chennai
Friday, Aug 21, 2026
முகப் பராமரிப்பு

முகத்துக்கு அழகு, பொலிவு, களை அள்ளித்தரும் ஸ்பூன் மசாஜ்!

ஆயில் மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… காபி மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… ஏன் பாம்பு மசாஜ்கூட கேள்விப்பட்டிருப்பீங்க… ஆனா ஸ்பூன் மசாஜ் கேள்விப்பட்டிருக்கீங்களா? இது நம்ம ஊர் கண்டுபிடிப்பில்லை. ஜெர்மன்ல உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்பூன் மசாஜைக் கண்டுபிடிச்சிருக்காங்க. முகம் பொலிவு பெற, அழகாக இந்த மசாஜ் உதவும். அதைப் பற்றிப் பார்ப்போமா..?

ஸ்பூன் மசாஜ்

ஸ்பூன் மசாஜ் செய்யும் முறை

* முதலில் இரண்டு ஸ்டீல் கரண்டி, இளஞ்சூடான ஆலிவ் அல்லது சூரியகாந்தி எண்ணெய், ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் மற்றும் சிறிதளவு ஐஸ் கட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* மசாஜ் செய்வதற்கு முன்னர் முகத்தை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு மாய்ஸ்ச்சரைசர் க்ரீமை சருமத்தில் பூச வேண்டும். இப்படி சருமத்தில் அழுத்தும்போது ஸ்பூனில் ஒட்டாமல் இருக்கும்.

* ஸ்பூனை எத்தனாலில் நனைத்து, ஐஸ்கட்டி சேர்த்து குளிர்ந்த நீரில் மூழ்கவைக்க வேண்டும்.

* எப்போது ஸ்பூன் குளிர்ந்தநிலையை, அடைகிறதோ அப்போது அதை எடுத்து மேற்புறக் கண்ணிமையின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதேபோன்று இரு கண்களிலும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பூன் சூடானநிலைக்கு வந்துவிட்டது என்றால், மறுமுறை குளிர்ந்த நீரில் நனைத்துக்கொள்ள வேண்டும். இது கண்ணில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.

* அதன் பின்னர் ஸ்பூனை எண்ணெயில் மூழ்க வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகச் சுருக்கங்களில் ஸ்பூனை வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.

* தலையிலிருந்து கழுத்து வரை மெதுவாக ஸ்பூனைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

* கண்களின் மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் ஸ்பூனை வைத்து வட்டமாக அழுத்த வேண்டும்.

* இதேபோல் மூக்கிலிருந்து கன்னம் வரையும், கன்னத்திலிருந்து கழுத்து வரையும் பின்னர் மீண்டும் கழுத்திலிருந்து கன்னம் வரையும் மசாஜ் செய்ய வேண்டும்.

முகம் கழுவுதல்

மசாஜ் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்…

* ஸ்பூன் மசாஜ் செய்யும்போது ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

* எப்போது உங்கள் ஸ்பூன் குழைவாக வழுக்கும்படி இல்லை என்று தெரிகிறதோ, அப்போது ஸ்பூனை எண்ணெயில் நனைத்துக்கொள்ள வேண்டும்.

* மசாஜ் செய்து முடித்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

* முதல் நாள் மசாஜ் செய்யும்போது, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களில் பயிற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பளபளப்பான முகம்

ஸ்பூன் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்…

* ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

* தோல் சுருக்கத்தை நீக்கும்.

* முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

* பன்னிரண்டு நாள்களிலேயே இது நல்ல பலனைக் கொடுக்கும்.

Related posts

எலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா?

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள் மற்றும் பருக்களைப் போக்கும் சூப்பர் டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

nathan

திருமண நாளில் நீங்க பிரகாசமாக ஜொலிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா முகம் பளபளன்னு இருக்க இந்த ரெண்டு பொருள் போதும்…

nathan