28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
1
மருத்துவ குறிப்பு

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

1

1. சேஃப்டி பின்: இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம். 2. ரக்‌ஷா:

2

இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும். 3. ஹிம்மாட்: டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.  எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும். 4.பெண்கள் பாதுகாப்பு:

4

நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். 5. ஸ்மார்ட் 24X7

5

பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும். 6. ஷேக் 2 சேஃப்டி:

6

மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய ‘உதவி தேவை’ என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும். 7. என் பில்:

7

குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?… உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப். 8. சிடோர் ஸ்குவாட்:

8

பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.   9.ஒ.பி.ஐ:

9

எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன…? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..? 10. மிண்ட்:

10

பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து காண்பித்து விடும்.

Related posts

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இந்த 8 அறிகுறிகள் உடலில் காணப்படும்

nathan

ஆரோக்கியமான பற்களைப் பெறுவதற்கான முக்கியமான டயட் டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… வருங்கால வாழ்க்கை துணை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

பாத வெடிப்பை சீக்கிரமாக சரிசெய்ய வேண்டுமா?டிப்ஸ் இதோ….!

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்

nathan

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

nathan

சூப்பரா பலன் தரும்!!நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ…

nathan