பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்களது பழைய உடலமைப்பைப் பெற கஷ்டப்படுவார்கள். ஆனால் சினிமா நடிகைகளால் மட்டும் எப்படி பிரசவத்திற்கு பின் சிக்கென்று மாறுகிறார்கள் என்று பலருக்கும் தோன்றும். அதிலும் சமீபத்தில் பிரசவித்த நடிகை கரீனா கபூர், இரண்டே மாதத்தில் மீண்டும் சிக்கென்று தனது பழைய உடலமைப்பைப் பெற்றுள்ளார்.
அதுவும் கர்ப்ப காலத்தில் 18 கிலோ எடை அதிகரித்த கரீனா கபூர், குறைந்த காலத்தில் எடையை குறைத்து சிக்கென்று மாறியது என்பது ஆச்சரியத்தை தான் உண்டாக்கும். உங்களுக்கு கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் சிக்கென்று மாற என்னவெல்லாம் செய்தார் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் இக்கட்டுரையில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பெரிய டம்ளர் பால்
கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் உடல் வலிமையை அதிகரிக்க தினமும் ஒரு பெரிய டம்ளர் பாலைக் குடித்து வந்தாராம். பொதுவாக கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திறகு பின் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும். இதை ஈடுகட்ட கரீனா பாலைக் குடித்து வந்துள்ளார். கரீனா கபூர் தன் பழை உடலமைப்பைப் பெற இதுவும் ஒரு காரணமாகும்.
தண்ணீர் கரீனா கபூர் ஒரு நாளைக்கு 8 டம்ளருக்கும் அதிகமான அளவில் நீரைக் குடித்ததும், அவரது சிக்கென்ற ரகசியத்திற்கு காரணம். அதுவும் பிரசவத்திற்கு பின் நன்கு கொதிக்க வைத்த நீரை அதிகளவில் குடித்தாராம்.
யோகா கரீனா விரைவில் சிக்கென்று மாறியதற்கு யோகாவும் ஒரு காரணம். யோகாவால் உடல் மட்டுமின்றி, மனமும் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். அதுவும் கரீனா கபூர் சூரிய நமஸ்கார், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் பின்பற்றினாராம்.
சைவ உணவு கரீனா கபூர் சுத்தமான சைவ பிரியர். இவர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் முசிலி, சீஸ், பிரட் துண்டு, பரோட்டா, சோயா பால், சப்பாத்தி, தால், சாலட் மற்றும் சூப் போன்றவற்றை தான் உட்கொண்டாராம். இவர் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற இந்த டயட்டும் ஓர் காரணம் என்றும் கரீனா கூறுகிறார்.
2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்நாக்ஸ் கரீனா கபூர் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம். அதுவும் ஸ்நாக்ஸாக புரோட்டீன் ஷேக் மற்றும் பழங்களைத் தான் உட்கொண்டாராம்.
கார்டியோ பயிற்சி யோகா மற்றும் டயட்டுடன், கரீனா கபூர் கார்டியோ பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாராம். இதுவும் சிக்கென்ற உடலமைப்பைப் பெற்றதற்கான ரகசியங்களுள் ஒன்றாம்.
நடைப்பயிற்சி ஆண் குழந்தை பிறந்த பின் கரீனா கபூர் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் நடைப்பயிற்சியை மேற்கொண்டாராம். பொதுவாக பிரசவத்திற்கு பின் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட முடியாது. ஆனால் நடைப்பயிற்சி எளிமையானது மட்டுமின்றி சிறந்ததும் கூட. எனவே சிரமம் பார்க்காமல் கரீனா கபூர் தவறாமல் நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டாராம்.