29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

கழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது? அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்!!

சிலருக்கு உடல் முகம் அனைத்தும் ஒரே நிறம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் குறிப்பிட்டு சொப்ன்னால் கருத்தின் பின்பகுதி மிகவும் கருமையாக மாறிவிடும்.

இது குழந்தை பிறந்தவுடன் அல்லது கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும். நாளடைவில் மறைந்திவிடும். ஆனா சிலருக்கு நிரந்தரமாக உண்டாகிவிடும்.

அதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கருத்தில் கருமை ஏற்படும். இதனை போக்குவதற்கு எளிய மற்றும் உண்மையில் பயனளிக்கக் கூடிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

வழி- 1 : பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

வழி- 2 : கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

வழி- 3 : முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

வழி-4 : பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

வழி-5 : சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்

Related posts

தெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…!!

nathan

ஒரே வாரத்தில் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற ஓர் அற்புத வழி!

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

அழகை மென்மேலும் அதிகரிக்க செய்ய உதவும் ரோஸ் வாட்டர்

nathan

கழுத்தைப் பராமரிக்க

nathan

கைகளில் சுருக்கமா?சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்

nathan

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan

புத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டிலேயே செய்யலாம்

nathan

சில டிப்ஸ்!!! கழுத்து, முகத்தில் மருவா… எளிதாக அகற்ற….

nathan