பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதையும், அதை தீர்க்கும் வழிமுறையையும் நாம் இப்பொழுது கீழே பார்க்கலாம்.
இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்
பெண்களே!!! உஷாராக இருங்கள். நீங்கள் நோயற்ற வாழ்வினை வாழ…தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களாயின் கண்டிப்பாக ஆயுட்காலத்தின் அழகினை உங்கள் குடும்பத்துடன் இணைந்து குதூகலத்துடன் வாழ்ந்து மகிழலாம் என்பதே உண்மையானதொரு விசயமாகும். பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதனை நாம் இப்பொழுது கீழே பார்க்கலாமா?
* புற்றுநோய்கள் பலவிதம். அவற்றுள் பெண்களை தாக்கும் புற்றுநோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறதாம்…நீங்கள் உண்ணும் உணவில் அதிகம் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் இருக்குமாயின் புற்றுநோயை விட்டு நீங்கள் விலகுவது சுலபமாகும். ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் எவற்றிலெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
நீங்கள் அருந்தும் கீரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேனீர், பேரிக்காய், ஆப்பிள்கள், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், இலை காய்கறிகள் ஆகியவற்றில் இந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் அதிகம் இருக்கிறதாம். தவிர்க்காமல் இவற்றை எல்லாம் எடுத்துகொள்ளுங்கள்.
* பெண்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நோய் பக்கவாதம் என்று சொல்ல…அந்த நோயோ அவர்கள் வாழ்க்கையை செயழிலக்க செய்து செதுக்கிய பொம்மைபோல் அசைவற்று அவர்களை அமரவைக்கிறது. இந்த பக்கவாதம் உங்களை தொட்டுபிடிக்க கூடாது என்றால்… நீங்கள் சிலவற்றினை செய்தாக வேண்டும்.
ஆரோக்கியமான இரத்த அழுத்தம் தான் இந்த பக்கவாதத்தையே செயழிலக்க செய்து உங்களை காப்பாற்றுகிறதாம். அத்துடன் ஆரோக்கியமான எடையையும் பராமரித்து சோடியம் உட்கொள்ளலை குறைத்து வந்தால் பக்கவாதமே உங்கள் உடல் ஆரோக்கியத்தை கண்டு பயந்து ஓடுகிறது. உங்கள் வயதிற்கு ஏற்ப பொட்டாசியத்தினை உட்கொள்ளுதலும் பக்கவாதத்திலிருந்து உங்களை காப்பாற்றுகிறது.
* பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல்பருமன். உங்கள் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுவது பதப்படுத்தப்பட்ட பொருள்களை உண்ணுவதே. சோம்பலும் நம் உடல் பருமன் அதிகரிக்க முக்கியமானதொரு காரணமாகும். ஒரே இடத்தில் நடைப்பிணமாய் நாம் அமர…உடல் பருமன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.
* பெண்களின் வாழ்வில் பெரும் கல்லை பாரமின்றி இறக்கி உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய் தான் இந்த மார்பக புற்றுநோயாகும். வல்லுனர்களின் வாக்குபடி இந்த நோயினை விரட்டமுடியும் என்கின்றனர். இந்த நோய் பாதிக்கும் ஆரம்ப காலத்திலே கவனமாக செயல்பட்டு சிகிச்சை மேற்கொண்டால்…நம்மால் இந்த மார்பக புற்று நோயிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
* இன்றைய நிலவரப்படி எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவிகிதம்.. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வாயிலாக இந்த நோயிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள். எலும்புகளை வலுப்படுத்துதல், கால்ஷியத்தை அதிகம் உட்கொள்ளுதல், எடை தூக்கும் பழக்கம் என சில வழிகளால் இந்த எலும்புப்புரை வராமல் காக்க முடியும் என சொல்ல…வந்த பிறகும் காக்க முடியும் என்ற ஓசையும் காதுகளில் விழத்தான் செய்கிறது.
* மன அழுத்தம் என்பது ஆண்களை அழுத்துவதனை காட்டிலும் பெண்களை ஒரு சதவிகிதம் அதிகமாகவே அழுத்துகிறதாம். சில சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் மன அழுத்தம் அதிகரிக்க…பல காரணங்களினால் சொந்த வாழ்க்கையின் மீது அனைவரும் பழி போட்டு காய் நகர்த்துகின்றனர் என்பதே உண்மை.