அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

waxing-800x400தற்போதுள்ள பெண்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். சிலருக்கு வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.இதனைத் தவிர்க்க வேண்டுமானால், வேக்சிங் செய்த பின்னர் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலைத் தணிப்பவற்றை தடவ வேண்டும். இங்கு வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தணிக்க வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்களை பார்க்கலாம்..

• வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் நீங்குவதோடு, அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

•  கற்றாழை ஜெல்லை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் தணிக்கப்பட்டு, அரிப்பும் நீங்கும்.

• உங்களுடையது வறட்சியான சருமம் என்றால் வாக்சிங் செய்த பின்னர் விரைவில் உலர்ந்துவிடும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவினால், மென்மையான மற்றும் அரிப்பில்லாத சருமத்தைப் பெறலாம்.

• டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், எரிச்சல், அரிப்பு படிப்படியாக குறையும்.

Related posts

பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட சில அட்டகாசமான டிப்

nathan

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை சுருக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம்?

nathan

கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!! ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்

nathan

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விடுங்கள் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் தெரியுமா ?

nathan