பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.
பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே. உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.
மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ்:
1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பிப் பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.
5. குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.
Related posts
Click to comment